ஐபிஎல் போட்டியிலும் நுழைந்தது கொரோனா: வீரர்கள் 2 பேருக்கு தொற்று உறுதி..! இன்றைய பெங்களூரு - கொல்கத்தா ஆட்டம் ஒத்திவைப்பு

தினகரன்  தினகரன்
ஐபிஎல் போட்டியிலும் நுழைந்தது கொரோனா: வீரர்கள் 2 பேருக்கு தொற்று உறுதி..! இன்றைய பெங்களூரு  கொல்கத்தா ஆட்டம் ஒத்திவைப்பு

டெல்லி: கொல்கத்தா வீரர்கள் வருண் சக்கரவரத்தி, சந்தீப் வாரியார் ஆகியோருக்கு கொரோனா தொற்று உறுதி ஆனதால் இன்று நடைபெறவிருந்த ஐபிஎல் போட்டி ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஐபிஎல் போட்டி விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், இன்று நடைபெறவுள்ள 30 வது லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் – கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் விருந்து. இந்த நிலையில் தற்போது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் உள்ள தமிழகத்தை சேர்ந்த வருண் சக்கரவர்த்தி, சந்தீப் வாரியார் இருவருக்கும் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதன் காரணமாக  இன்று நடைபெறும் இந்த  போட்டியை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. மேலும் இந்த போட்டியை வேறு தேதிக்கு மாற்றி வைக்க குஜராத் கிரிக்கெட் கூட்டமைப்பை சேர்ந்தவர்கள் ஆலோசனை செய்து விரைவில் அறிவிப்பார்கள்  என்று கூறப்படுகிறது. மேலும் கொரோனா உறுதி செய்யப்பட்ட வருண் சக்கரவரத்தி, சந்தீப் சர்மா ஆகிய  இரண்டு வீரர்களும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

மூலக்கதை