நிறம் மாறும் பெங்களூரு ‘ஜெர்சி’ * கொரோனா ஹீரோக்களுக்கு கவுரவம் | மே 03, 2021

தினமலர்  தினமலர்
நிறம் மாறும் பெங்களூரு ‘ஜெர்சி’ * கொரோனா ஹீரோக்களுக்கு கவுரவம் | மே 03, 2021

ஆமதாபாத்: கொரோனா முன்கள பணியாளர்களை கவுரவிக்கும் வகையில் பெங்களூரு அணி நீல நிற ‘ஜெர்சி’ அணிந்து விளையாட உள்ளது.

ஐ.பி.எல்., தொடரில் கோஹ்லி தலைமையிலான பெங்களூரு அணி, ஒவ்வொரு சீசனிலும் பசுமை இயக்கத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் ஏதாவது ஒரு போட்டியில் பச்சை நிற ‘ஜெர்சியில்’ விளையாடும். தற்போது கொரோனா முன்கள பணியாளர்களை கவுரவிக்க முடிவு செய்துள்ளனர்.

இதன் படி வரும் போட்டிகளில் ஏதாவது ஒன்றில் நீல நிற ‘ஜெர்சி’ அணிந்து விளையாட உள்ளது. இதுகுறித்து அணி வெளியிட்ட ‘டுவிட்டர்’ செய்தியில்,‘பெங்களூரு மற்றும் பிற நகரங்களில் கொரோனா பாதித்தவர்களுக்கு தேவைப்படும் ஆக்சிஜன் உட்பட மருத்துவ கட்டமைப்பு பொருட்களை கண்டறிந்து, அவர்களுக்கு உடனடியாக உதவ பெங்களூரு முடிவு செய்துள்ளது. இதற்குத் தேவையான நிதி வசதிகளை ஏற்படுத்தித் தரவுள்ளோம். தவிர கொரோனா பாதிக்கப்பட்டவர்களை மீட்க கவச உடை அணிந்து கடந்த ஆண்டு போராடிய முன்கள பணியாளர்களை கவுரவிக்கவும், ஒற்றுமையை காட்டும் வகையிலும் பெங்களூரு வீரர்கள் நீல நிற ‘ஜெர்சி’ அணிந்து விளையாட உள்ளனர்,’ என தெரிவித்துள்ளது.

மூலக்கதை