ஆப்கானிஸ்தானில் அரசு விருந்தினர் இல்லம் அருகே குண்டு வெடிப்பு: மாணவர்கள் உள்பட 30 பேர் உயிரிழப்பு

தினகரன்  தினகரன்
ஆப்கானிஸ்தானில் அரசு விருந்தினர் இல்லம் அருகே குண்டு வெடிப்பு: மாணவர்கள் உள்பட 30 பேர் உயிரிழப்பு

ஆப்கானிஸ்தான்: ஆப்கானிஸ்தானில் அரசு விருந்தினர் இல்லம் அருகே நடந்த கார் குண்டு வெடிப்பில் பள்ளி மாணவர்கள் உள்பட 30 பேர் உயிரிழந்தனர். நேற்று முன்தினம் மாலை இந்த விருந்தினர் இல்லத்துக்கு அருகே பயங்கரவாதிகள் வெடிகுண்டுகள் நிரப்பிய காரை நிறுத்தி வெடிக்கச் செய்தனர். விருந்தினர் இல்லத்தில் ஒரு பகுதி முற்றிலுமாக இடிந்து விழுந்தது. அருகில் உள்ள பல கட்டிடங்களில் மேற்கூரைகள் இடிந்து விழுந்தன. இதில் பலர் இடிபாடுகளில் சிக்கி நசுங்கினர். இந்த குண்டு வெடிப்பில் உயர்நிலைப் பள்ளி மாணவர்கள் உள்பட 30 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 90-க்கும் மேற்பட்டோர் பலத்த காயமடைந்தனர். அவர்கள் அனைவரும் உடனடியாக மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் பலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை மேலும் உயரும் என கூறப்படுகிறது.

மூலக்கதை