இந்தியாவில் இருந்து வந்தால் 5 ஆண்டுகள் சிறை தண்டனை: ஆஸி. அரசு எச்சரிக்கை

தினகரன்  தினகரன்
இந்தியாவில் இருந்து வந்தால் 5 ஆண்டுகள் சிறை தண்டனை: ஆஸி. அரசு எச்சரிக்கை

இந்தியாவில் இருக்கும் ஆஸ்திரேலிய குடிமக்கள் நாடு திரும்புவதற்கு அந்நாடு அரசு திடீர் தடை விதித்துள்ளது. மேலும், அதையும் மீறி வருபவர்களுக்கு 5 ஆண்டு சிறை தண்டனையும், கடும் அபராதமும் விதிக்கப்படும் என எச்சரித்துள்ளது. இந்நாட்டில் தனிமைப்படுத்தப்பட்டு இருக்கும் பெரும்பாலானவர்களுக்கு இந்தியாவில் இருந்தே தொற்று ஏற்பட்டுள்ளது. அதன் காரணமாகவே, இந்த நடவடிக்கையை ஆஸ்திரேலியா எடுத்துள்ளது. இதனால், இந்தியாவில் கடந்த 14 நாட்களாக தங்கியிருந்து, ஆஸ்திரேலியா செல்ல தயாராக இருந்த ஏராளமான பேர் பாதித்துள்ளனர்.

மூலக்கதை