சீன பெண் இயக்குநர் இயக்கிய ‘நோமேட்லேண்ட்’ படத்துக்கு 3 ஆஸ்கர் விருது: சிறந்த நடிகையாக பிரான்சஸ் மெட்டோர்மெண்ட் தேர்வு

தமிழ் முரசு  தமிழ் முரசு
சீன பெண் இயக்குநர் இயக்கிய ‘நோமேட்லேண்ட்’ படத்துக்கு 3 ஆஸ்கர் விருது: சிறந்த நடிகையாக பிரான்சஸ் மெட்டோர்மெண்ட் தேர்வு

லாஸ் ஏஞ்சல்ஸ: அமெரிக்காவில் நடந்த நிகழ்ச்சியில், சீன பெண் இயக்குநர் க்ளோயி சாவ் இயக்கிய நோமேட்லேண்ட் படம் 3 ஆஸ்கர் விருதுகளை வென்றது. அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் 93வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா நடைபெற்று வருகிறது.

கொரோனா பரவல் காரணமாக விழாவுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதேசமயம் வழக்கமாக பிரமாண்ட முறையில் இல்லாமல் கடந்தாண்டை போன்று இந்தாண்டும் எளிய முறையில் விழா நடைபெற்று வருகிறது.

இந்திய நேரப்படி இன்று அதிகாலை 5. 30 மணிக்கு துவங்கிய இந்த விழாவில், பல்வேறு பிரிவுகளில் விருதுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.

அதில், சீன பெண் இயக்குநர் க்ளோயி சாவ் இயக்கிய ‘நோமேட்லேண்ட்’ என்ற திரைப்படம் 3 ஆஸ்கர் விருதுகளை பெற்றது. சிறந்த இயக்குநர், சிறந்த படம், சிறந்த நடிகை ஆகிய பிரிவுகளில் நோமேட்லேண்ட் படம் விருதுகளை வென்றது.

மேலும் சிறந்த நடிகருக்கான விருதை ‘தி ஃபாதர்’ படத்தில் நடித்த ஆண்டனி ஹாப்கின்ஸும், சிறந்த நடிகைக்கான விருதை ‘நோமேட்லேண்ட்’ படத்தில் நடித்த பிரான்சஸ் மெட்டோர்மெண்ட் பெற்றனர். அதேசமயம் சிறந்த வெளிநாட்டு திரைப்படத்துக்கான விருதை டென்மார்க்கின் ‘அனதர் ரவுண்ட்’ பெற்றது.



மேலும், மாங்க், மா ரெயினிஸ் பிளாக் பாட்டம், சோல், ஜுடாஸ் அண்ட் பிளாக் மெசியா, மாங்க் ஆகிய படங்கள் 2 ஆஸ்கர் விருதுகளை வென்றன. சிறந்த மூல திரைக்கதை - ப்ராமிஸிங் யங் வுமன்; சிறந்த துணை நடிகர் - டேனியல் கல்லுயா (ஜுடாஸ் அண்ட் பிளாக் மெசியா); சிறந்த ஒப்பனை மற்றும் சிகை அலங்காரம் - செர்கியோ லோபெஸ் (மா ரெயினிஸ் பிளாக் பாட்டம்); சிறந்த இயக்குனர் - சோலி ஜாவோ (நோமேட்லேண்ட்); சிறந்த ஆவண குறும்படம் - கோலெட்; சிறந்த ஒளிப்பதிவு - எரிக் மெஸ்செர்மிட்; மனிதாபிமான விருது - டைலர் பெர்ரி; சிறந்த நடிகர் - ஆன்டனி ஹாப்கின்ஸ் (மாங்க்) உள்ளிட்ட பல்வேறு தகுதிகளின் அடிப்படையில் விருதுகள் வழங்கப்பட்டன.


.

மூலக்கதை