பிரிட்டன் இளவரசர் பிலிப் உடல் அடக்கம்

தினமலர்  தினமலர்
பிரிட்டன் இளவரசர் பிலிப் உடல் அடக்கம்

லண்டன்:ஐரோப்பிய நாடான பிரிட்டனின் ராணி இரண்டாம் எலிசபெத், 94. இவரது கணவர் பிலிப், 99, கடந்த வாரம் காலமானார்.

எட்டு நாள் துக்கம் கடைப்பிடிக்கப்பட்டு, நேற்று, பிலிப் உடல், அரச வழக்கப்படி நல்லடக்கம் செய்யப்பட்டது.வின்ட்சர் அரண்மனையில் இருந்து, பிலிப் உடல், 'லேண்ட்ரோவர்' வாகனத்தில் வைக்கப்பட்டு, அருகில் இருந்த புனித ஜார்ஜ் தேவாலயத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது. அப்போது, துப்பாக்கி குண்டுகள் முழங்க மரியாதை செலுத்தப்பட்டது.

பிரார்த்தனை முடிந்ததும், பிலிப் உடல், தேவாலாயத்தின் கீழ் தளத்தில், 'ராயல் வால்ட்' என்ற பகுதியில், மூன்றாம் ஜார்ஜ், எட்டாம் ஹென்றி மன்னர்களின் உடல் அருகே நல்லடக்கம் செய்யப்பட்டது.

மூலக்கதை