வருங்காலம் பெரும் சவாலாகும்: விஜயபாஸ்கர் கவலை

தினமலர்  தினமலர்
வருங்காலம் பெரும் சவாலாகும்: விஜயபாஸ்கர் கவலை

புதுக்கோட்டை:''பொதுமக்கள் அஜாக்கிரதையாக இருந்தால் வரும் காலம் பெரும் சவாலாக அமையும்'' என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.
புதுக்கோட்டையில் நேற்று அவர் கூறியதாவது:தமிழ் சினிமாவில் சின்னக்கலைவாணர் என்று அழைக்கப்படும் நடிகர் விவேக்கின் மறைவிற்கு இரங்கல் தெரிவித்து கொள்கிறேன்.
தமிழகத்தில் கொரோனா தாக்கம் அதிகரித்து வருகிறது. 45 வயதுக்கு மேற்பட்டவர்கள் கட்டாயமாக தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். தடுப்பூசி போட்டுக்கொண்டால் இறப்பில் இருந்து தற்காத்துக் கொள்ளலாம்.

தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளதால் கொரோனா தடுப்பு பணிகளை செய்ய இயலவில்லை இருப்பினும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சரிடம் தமிழகத்தின் நிலையை எடுத்துக் கூறி கூடுதலாக 'ரெண்டிவிசர்' மருந்து தேவை என்று கோரிக்கை வைத்துள்ளேன்.
தமிழகத்தில் கொரோனா முதல் அலையின் போதே சுகாதாரத்துறையில் வலுவான கட்டமைப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதனால் எந்த சூழ்நிலையையும் சமாளிக்கும் நிலையில் தமிழக சுகாதாரத்துறை அதிகாரிகள் மற்றும் மருத்துவர்கள் தயாராகிவிட்டனர்.
பொதுமக்கள் அலட்சியமாகவும் அஜாக்கிரதையாகவும் இருந்தால் வரும் காலங்களில் மிகப்பெரிய சவாலை சந்திக்க வேண்டி இருக்கும்.இவ்வாறு அவர் கூறினார்.

மூலக்கதை