கொரோனா தொற்று பரவல் ; கர்நாடக அரசுக்கு உயர்நீதிமன்றம் கிடுக்கி

தினமலர்  தினமலர்
கொரோனா தொற்று பரவல் ; கர்நாடக அரசுக்கு உயர்நீதிமன்றம் கிடுக்கி

பெங்களூரு : மாநிலத்தில் கொரோனா தொற்று அதிகரிப்பதால், அரசுக்கு கர்நாடக உயர்நீதிமன்றம், சில உத்தரவுகளை பிறப்பித்துள்ளது.


கர்நாடகாவில், கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரிக்கிறது. இது தொடர்பாக கர்நாடக உயர்நீதிமன்றத்தில், பொது நலன் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.இம்மனு தொடர்பாக, விசாரணை நடத்திய நீதிமன்றம், 'கொரோனா பரிசோதனை அறிக்கை அளிப்பதில் தாமதமாகிறது. எஸ்.எம்.எஸ்., வாட்ஸ் ஆப் மூலம், விரைந்து அறிக்கை அளிக்க வேண்டும். பரிசோதனை செய்த, 24 மணி நேரத்துக்குள், அறிக்கை கிடைக்க வேண்டும். கொரோனா பரிசோதனை செய்து கொண்டவர்கள், வீட்டில் தனிமையில் இருக்க வேண்டும்.

நோயாளிகளுக்கு படுக்கை வசதி செய்து கொடுப்பது, அரசின் கடமை. அவசியமில்லை என்றாலும், சிலர் தனியார் மருத்துவமனையில் சேர்ந்துள்ளனர்.மருத்துவமனைகளின் சிகிச்சை கட்டணத்தை கட்டுப்படுத்த, உதவி எண் துவக்க வேண்டும். இந்த, உதவி எண் தொடர்பாக, மக்களுக்கு அரசு பிரசாரம் செய்ய வேண்டும். இவ்வாறு கோர்ட் உத்தரவிட்டுள்ளது.

மூலக்கதை