மருந்து பொருட்கள் ஏற்றுமதி 18 சதவீதம் அதிகரிப்பு

தினமலர்  தினமலர்
மருந்து பொருட்கள் ஏற்றுமதி 18 சதவீதம் அதிகரிப்பு

புதுடில்லி:கடந்த நிதியாண்டில், இந்திய மருந்து நிறுவனங்களின் ஏற்றுமதி, 18 சதவீதம் அளவுக்கு அதிகரித்துள்ளது. கிட்டத்தட்ட, 1.83 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு ஏற்றுமதி ஆகியுள்ளது.

இதற்கு முந்தைய நிதியாண்டில், 1.54 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கே ஏற்றுமதி செய்யப் பட்டது.இது குறித்து, இந்திய மருந்துகள் ஏற்றுமதி மற்றும் மேம்பாட்டு கவுன்சில் தெரிவித்து உள்ளதாவது:அண்மைக் காலமாக மருந்துகள் ஏற்றுமதி அதிகரித்து வருகிறது. குறிப்பாக, கடந்த நிதியாண்டில், மார்ச் மாதத்தில், மிக அதிகளவில் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. அந்த மாதத்தில் மட்டும், 48.5 சதவீதம் அளவுக்கு அதிகரித்துள்ளது.

உலக மருந்து சந்தைகள், 1 – 2 சதவீதம் அளவுக்கு வீழ்ச்சி கண்ட நிலையில், அவற்றுக்கு மாறாக, இந்திய மருந்துகளுக்கான தேவைகள் அதிகரித்து உள்ளது.வரும் ஆண்டுகளில் தடுப்பு ஊசி ஏற்றுமதி காரணமாக, இந்தியாவில் நல்ல வளர்ச்சி காணப்படும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், உற்பத்தியுடன் இணைந்த ஊக்கச்சலுகை திட்டம் காரணமாகவும் வளர்ச்சி அதிகரிக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.இந்தியாவிலிருந்து, வட அமெரிக்காவுக்கு அதிகளவில் ஏற்றுமதி நடைபெற்றுள்ளது. கிட்டத்தட்ட 34 சதவீதம் ஆகும்.இதையடுத்து, அமெரிக்கா, கனடா, மெக்ஸிகோ ஆகியவற்றுக்கும் அதிகளவில் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது.இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூலக்கதை