ஜப்பான் பிரதமருடன் ஜோ பைடன் சந்திப்பு

தினமலர்  தினமலர்
ஜப்பான் பிரதமருடன் ஜோ பைடன் சந்திப்பு

வாஷிங்டன்:ஜப்பான் பிரதமருடன் நேரில் ஆலோசனை நடத்திய, அமெரிக்க அதிபர் ஜோ பைடன், ''ஒருவரை, நேருக்கு நேர் சந்தித்து பேசுவதற்கு மாற்றாக, வேறு எதுவும் இல்லை,'' என்றார். அமெரிக்க அதிபராக ஜோ பைடன், ஜன., 20ல் பதவியேற்றார்.

கொரோனா பரவல் காரணமாக, வெளிநாட்டு தலைவர்களுடன், 'வீடியோ கான்பரன்சிங்' அல்லது தொலைபேசி வழியாகவே பேசி வருகிறார்.இந்நிலையில், கிழக்கு ஆசிய நாடான ஜப்பானின் பிரதமர் யோஷிஹிடே சுகா, அமெரிக்காவுக்கு வந்துள்ளார். வாஷிங்டனில், வெள்ளை மாளிகையில் அதிபர் ஜோ பைடனை, நேற்று முன்தினம் சந்தித்து பேசினார். சந்திப்புக்கு பின், இருவரும் நிருபர்களை சந்தித்தனர்;

அப்போது ஜோ பைடன் கூறியதாவது:ஜப்பானுடன் அமெரிக்காவுக்கு, நீண்ட காலமாக நல்லுறவு இருந்து வருகிறது. நேருக்கு நேர் ஒருவரை சந்தித்து பேசி, ஆலோசனை நடத்துவதற்கு மாற்றாக, வேறு எதுவும் இல்லை.ஜப்பான் பிரதமரை, சில மாநாடுகளில், வீடியோ கான்பரன்சிங் வழியாக சந்தித்துள்ளேன். ஆனால், இப்போது தான் நேரில் சந்தித்துள்ளேன். அதிபரான பின், நான் நேரில் சந்தித்த முதல் வெளிநாட்டு தலைவரும் இவர் தான். எங்களுக்கு இடையேயான பேச்சு, திருப்திகரமாக இருந்தது. இவ்வாறு அவர் கூறினார்.

மூலக்கதை