முசிறி - நாமக்கல் இடையிலான சாலை 4 வழிச் சாலையாகிறது: ஒன்றிய அரசு ஒப்புதல் அளித்து ரூ.104.54 கோடி ஒதுக்கீடு செய்தது!!

தினகரன்  தினகரன்
முசிறி  நாமக்கல் இடையிலான சாலை 4 வழிச் சாலையாகிறது: ஒன்றிய அரசு ஒப்புதல் அளித்து ரூ.104.54 கோடி ஒதுக்கீடு செய்தது!!

திருச்சி : திருச்சி - சேலம் நெடுஞ்சாலையில் முசிறியில் இருந்து நாமக்கல் வரையிலான சாலையை அகலப்படுத்த ஒன்றிய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. திருச்சி - சேலம் சாலை அகலம் குறைந்த அதே நேரத்தில் குறுகலான வளைவுகள் அதிகம் உள்ள சாலை என்பதால் அடிக்கடி விபத்துகள் நேரிடுவதை தடுக்க வளைவுகளை நேர் செய்து சாலைகளை அகலப்படுத்த வேண்டும் என்பது பொது மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாகும். இந்த கோரிக்கையின் அடிப்படையில் இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் முசிறியில் இருந்து நாமக்கல் வரையிலான உள்ள இரு வழிச்சாலையை 4 வழிச்சாலையாக அகலப்படுத்துவதற்கான விரிவான திட்ட அறிக்கையை தயாரித்தது. அதன் அடிப்படையில், முசிறி - நாமக்கல் இடையிலான இரு வழிச்சாலையை 4 வழிச்சாலையாக அகலப்படுத்த ஒன்றிய அரசு ஒப்புதல் கொடுத்து இருப்பதாக ஒன்றிய சாலை போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். இதற்காக ரூ.104.54 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு இருப்பதாகவும் அவர் தமது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து விரைவில் ஒப்பந்த புள்ளி கோரப்பட்டு, சாலையை அகலப்படுத்தக் கூடிய பணி தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மூலக்கதை