சமந்தா பற்றி கமென்ட் நாகார்ஜுனா மறுப்பு

தினகரன்  தினகரன்
சமந்தா பற்றி கமென்ட் நாகார்ஜுனா மறுப்பு

ஐதராபாத்: சமந்தா பற்றி தான் கூறியதாக வந்த தகவல் பொய்யானது என நாகார்ஜுனா மறுத்துள்ளார். நாகார்ஜுனாவின் மகனும் நடிகருமான நாக சைதன்யா, நடிகை சமந்தா ஆகியோர் தங்களது திருமண உறவை முறித்துக்கொண்டனர். இதுகுறித்து கருத்து தெரிவித்த நாகார்ஜுனா, இந்த முடிவு துரதிருஷ்டவசமானது. இருவரும் பிரச்னைகளை பேசி தீர்த்து இருக்கலாம் என கூறியிருந்தார். இந்நிலையில் ‘கடந்த 2021ம் ஆண்டு புத்தாண்டுக்கு பிறகுதான் நாக சைதன்யா, சமந்தா இடையே பிரச்னை எழுந்தது. விவாகரத்தை முதலில் கேட்டது சமந்தாதான்’ என நாகார்ஜுனா நேற்று முன்தினம் சொன்னதாக சில மீடியாவில் தகவல் வந்தது. இதுகுறித்து டிவிட்டரில் நாகார்ஜுனா நேற்று கூறியிருப்பதாவது: சைதன்யா, சமந்தா பற்றி நான் சொன்னதாக எலெக்ட்ரானிக் மீடியாவிலும் சமூக வலைத்தளத்திலும் ஒரு செய்தி வெளியானது. அது முழுக்க பொய். அப்படி ஒரு கருத்தை நான் சொல்லவே இல்லை. வதந்திகளை செய்தியாக போடுவதை தவிர்க்க வேண்டும். இவ்வாறு நாகார்ஜுனா கூறியுள்ளார்.

மூலக்கதை