திருப்பதி திருமலையில் வெப்ப காற்றால் ஏற்படும் தீ விபத்தை தடுப்பது எப்படி?... அறிக்கை தயாரிக்க குழு

தினகரன்  தினகரன்
திருப்பதி திருமலையில் வெப்ப காற்றால் ஏற்படும் தீ விபத்தை தடுப்பது எப்படி?... அறிக்கை தயாரிக்க குழு

திருமலை: திருமலையில் வெப்ப காற்றால் ஏற்படும் தீ விபத்துகளை தடுப்பதற்கான அறிக்கையை தயாரிக்க குழு அமைக்கப்பட்டுள்ளது. ஆந்திர மாநிலம், திருமலையில் உள்ள அன்னமய்யா பவனில் திருப்பதி தேவஸ்தானத்தில் பேரிடர் மேலாண்மை திட்டம் தொடர்பாக கூடுதல் செயல் அதிகாரி தர்மா நேற்று ஆலோசனை நடத்தினார். அவர் பேசியதாவது:திருப்பதி தேவஸ்தானத்திற்கு 3 முக்கியமான சவால்கள் உள்ளன. மேக வெடிப்புகளால் கோடையில்  கடும் மழையால் ஏற்படும் சேதம், வெப்ப காற்றால் ஏற்படும் தீ விபத்துகளை தடுக்க வேண்டும். பக்தர்கள் கூட்டம் எவ்வளவு அதிகரித்தாலும் அதனை திறம்பட கையாள்வதற்கான பாதுகாப்பு அமைப்பு நம்மிடம் உள்ளது. அதேபோல், இயற்கை பேரிடர்களால் ஏற்படும் அதிக சேதத்தை தடுக்கவும் தயாராக இருக்க வேண்டும். இதற்கான, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து திட்ட அறிக்கை செய்ய வேண்டும். இதற்காக கண்காணிப்பு பொறியாளர்  ஜெகதீஸ்வர் தலைமையில் போக்குவரத்து பொதுச் மேலாளர்  சேஷா, மின்சாரத்துறை மண்டல மேலாளர் ரவிசங்கர், விஜிஓ பாலி, எஸ்டேட் அதிகாரி மல்லிகார்ஜூனா, சுவேத இயக்குனர் மற்றும் மண்டல வன அலுவலர்  பிரசாந்தி ஆகியோர் உறுப்பினர்களாக கொண்ட குழு அமைக்கப்படும். திருமலையில் நிகழக்கூடிய ஒவ்வொரு பேரிடருக்கும் உடனே துரித நடவடிக்கை எடுக்கும் விதமாக, 4 நாளில் ஒவ்வொரு துறைகளுக்கும் பாதுகாப்பு குழுவை உருவாக்கி, அதை குழுவிடம் தெரிவிக்க வேண்டும். அடுத்த வாரத்திற்குள் இக்குழு விரிவான அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும். இவ்வாறு, அவர் பேசினார்.

மூலக்கதை