ஆஷ்லி - கோலின்ஸ் இன்று மோதல்

தினகரன்  தினகரன்
ஆஷ்லி  கோலின்ஸ் இன்று மோதல்

ஆஸ்திரேலிய ஓபன் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில், உள்ளூர் நட்சத்திரமும் நம்பர் 1 வீராங்கனையுமான ஆஷ்லி பார்டியுடன் அமெரிக்காவின் டேனியலி கோலின்ஸ் இன்று மோதுகிறார். கடந்த 42 ஆண்டுகளில் ஆஸி. ஓபன் பைனலுக்கு முன்னேறிய முதல் ஆஸ்திரேலிய வீராங்கனை என்ற பெருமையை பெற்றிருக்கும் ஆஷ்லி (25 வயது), முதல் முறையாக கிராண்ட் ஸ்லாம் தொடரின் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ள கோலின்ஸ் (28 வயது, 27வது ரேங்க்) மோதும் இப்போட்டி டென்னிஸ் ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. * இருவரும் 4 முறை மோதியுள்ளதில் ஆஷ்லி 3-1 என முன்னிலை வகிக்கிறார். * நடப்பு சீசனில் ஆஷ்லி (10/10), கோலின்ஸ் (6/6) இருவரும் இதுவரை தோல்வியை சந்திக்கவில்லை.

மூலக்கதை