தமிழ்நாட்டில் அடுத்த 2 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு

தினகரன்  தினகரன்
தமிழ்நாட்டில் அடுத்த 2 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு

சென்னை: மன்னார் வளைகுடா அதை ஒட்டிய பகுதியில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் தமிழ்நாட்டில் அடுத்த 2 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் வட கடலோர மாவட்டங்கள், தென் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு உள்ளது. புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது எனவும் கூறியுள்ளது.

மூலக்கதை