மராட்டியத்தில் பெண் காவலர்களுக்கான பணி நேரம் 8 மணி நேரமாக குறைப்பு : காவல்துறை டிஜிபி

தினகரன்  தினகரன்
மராட்டியத்தில் பெண் காவலர்களுக்கான பணி நேரம் 8 மணி நேரமாக குறைப்பு : காவல்துறை டிஜிபி

மும்பை : மராட்டிய மாநிலத்தில் பெண் காவலர்களுக்கான பணி நேரம் குறைக்கப்பட்டுள்ளது. மராட்டியத்தில் பெண் காவலர்கள்12 மணி நேரத்துக்குப் பதிலாக 8 மணி நேரம் மட்டுமே பணியில் இருக்க வேண்டும் என்று அம்மாநில காவல்துறை டிஜிபி சஞ்சய் பாண்டே உத்தரவு பிறப்பித்துள்ளார்.ஆண் மற்றும் பெண் காவலர்களின் பணி நேரம் 12 மணி நேரமாக இருக்கும் நிலையில், தற்போது பெண் காவலர்களுக்காண பணி நேரம் 8 மணி நேரமாக குறைக்கப்பட்டுள்ளது.சோதனை அடிப்படையில் முதற்கட்டமாக நாக்பூர், அமராவதி நகரங்கள் மற்றும் புனே கிராமப்புறங்களில் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இருப்பினும் அவசர நிலை மற்றும் விழாக் காலங்களில் பெண் காவலர்களுக்கான பணி நேரத்தை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர்கள் அல்லது துணை காவல் ஆணையர்களின் அனுமதியுடன் அதிகரிக்கலாம் எனவும் உத்தரவில் கூறப்பட்டுள்ளது. இந்த உத்தரவு செயல்படுத்தப்படுவதை யூனிட் கமாண்டர்கள் உறுதி செய்ய வேண்டும் என்றும் பெண் அதிகாரிகளுக்கு சிறந்த வேலை-வாழ்க்கை சமநிலையை வழங்கவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

மூலக்கதை