அமெரிக்க கார்ப்பரேட் துறை டாடா குழுமத்துக்கு வாழ்த்து

தினமலர்  தினமலர்
அமெரிக்க கார்ப்பரேட் துறை டாடா குழுமத்துக்கு வாழ்த்து

வாஷிங்டன்:‘ஏர் இந்தியா’ நிறுவனத்தை, ‘டாடா குழுமம்’ திரும்ப பெற்றதற்கு, அமெரிக்க கார்ப்பரேட் துறையினர் வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.
அமெரிக்காவின் மிகப் பெரிய கார்ப்பரேட் அமைப்புகளுள் ஒன்றான, அமெரிக்க – இந்திய வர்த்தக கவுன்சில், ஏர் இந்தியா நிறுவனத்தை மீண்டும் பெற்றதற்கு, டாடா குழுமத்துக்கு தன்னுடைய வாழ்த்துகளை தெரிவித்துள்ளது. மேலும், பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையிலான அரசு மேற்கொண்ட வெற்றிகரமான பங்கு விலக்கல் திட்டத்திற்காகவும், பாராட்டை தெரிவித்துள்ளது.
இதேபோல் அமெரிக்க – இந்திய வியூக கூட்டாண்மை அமைப்பின் தலைவரான முகேஷ் அகி, ‘டாடா குழுமத்துக்கு இது ஒரு மைல் கல் தருணமாகும்’ என்று தெரிவித்து, மொத்த டாடா குழுமத்துக்கும், அதன் தலைவர் என்.சந்திரசேகரனுக்கும் வாழ்த்துகளை தெரிவித்து உள்ளார்.மேலும் பல்வேறு அமெரிக்க நிறுவனங்களின் தலைவர்களும் டாடா குழுமத்துக்கு தங்களுடைய வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

மூலக்கதை