வாராக் கடன் வங்கி செயல்பட தயார்

தினமலர்  தினமலர்
வாராக் கடன் வங்கி செயல்பட தயார்

மும்பை, ஜன. 29–

வாராக் கடனை வசூலிப்பதற்கான நிறுவனமான, என்.ஏ.ஆர்.சி.எல்., தன்னுடைய செயல்பாடுகளை விரைவில் துவக்க உள்ளது.இது குறித்து எஸ்.பி.ஐ., தலைவர் தினேஷ் காரா கூறியதாவது:வாராக் கடன் வங்கி செயல்படுவதற்கான அனைத்து அனுமதிகளும் பெறப்பட்டு விட்டன. இவ்வங்கிக்கு மாற்றப்படுவதற்கான 82 ஆயிரத்து 845 கோடி ரூபாய் மதிப்பிலான 38 வாராக் கடன் கணக்குகள் கண்டறியப்பட்டுள்ளன.
இந்த 38 கணக்குகள் பல கட்டங்களாக வாராக் கடன் வங்கிக்கு மாற்றப்படும். முதல் கட்டமாக, 50 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான, 15 வாராக் கடன் கணக்குகள் மாற்ற ஒப்புதல் பெறப்பட்டுள்ளது.இந்த கணக்குகள் மார்ச் மாதத்தில் மாற்றப்பட்டுவிடும். இவ்வாறு அவர் கூறினார்.
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், வாராக் கடன் பிரச்னையை தீர்க்கும் விதமாக வாராக் கடன் வங்கி ஏற்படுத்தப்படும் என, 2021 – 22 பட்ஜெட் உரையின் போது தெரிவித்திருந்தார்.

மூலக்கதை