அரசு நிறுவனங்களை வாங்க வேகம் காட்டும் வேதாந்தா

தினமலர்  தினமலர்
அரசு நிறுவனங்களை வாங்க வேகம் காட்டும் வேதாந்தா


புதுடில்லி : அனில் அகர்வால் தலைமையிலான, ‘வேதாந்தா ரிசோசர்ஸ்’ நிறுவனம், நாட்டின் பொதுத்துறை நிறுவனங்களை வாங்குவதற்கான ஒரு நிதியை உருவாக்க திட்டமிட்டு உள்ளது.

90 ஆயிரம் கோடி ரூபாய்
பொதுத்துறை நிறுவனங்களான பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன், எஸ்.இ.ஐ., ஆகியவற்றில், அரசின் வசம் இருக்கும் பங்குகளை வாங்குவதில் வேதாந்தா நிறுவனம் ஆர்வம் காட்டி வருகிறது.இந்த இரு நிறுவனங்களின் மதிப்பு கிட்டத்தட்ட 90 ஆயிரம் கோடி ரூபாய். இதனையடுத்து 75 ஆயிரம் கோடி ரூபாயில் ஒரு நிதியை உருவாக்கும் திட்டத்தில் வேதாந்தா உள்ளது. இதில் வேதாந்தாவும் வேறு சில நிறுவனங்களும் முதலீடு செய்ய இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிதியை ஏற்படுத்துவதற்கு மிகப் பெரிய வரவேற்பு கிடைத்திருப்பதாகவும் வேதாந்தா தெரிவித்துஉள்ளது.
இது குறித்து, அனில் அகர்வால் தெரிவித்துள்ளதாவது:
அரசு பங்கு விலக்கலை அறிவித்தவுடன், கால தாமதம் எதுவும் செய்யாமல், நிறுவனங்களை உடனே ஏலத்தில் வாங்குவதற்கான பணம் இந்த நிதியில் தயாராக இருக்கும். முதலீடு மேலும் தலைவராக நானே இருக்க வேண்டும் என இந்த நிதியில் முதலீடு செய்யும் அனைவரும் விரும்புகிறார்கள்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

மூலக்கதை