ஏசி, பெரிய டிவிகளுக்கு ஜி.எஸ்.டி.,யை குறைக்க கோரிக்கை

தினமலர்  தினமலர்
ஏசி, பெரிய டிவிகளுக்கு ஜி.எஸ்.டி.,யை குறைக்க கோரிக்கை


புதுடில்லி : வரும் பட்ஜெட்டில், ஏசி மற்றும் பெரிய டிவிகளுக்கான ஜி.எஸ்.டி.,யை குறைக்க வேண்டும் என, நுகர்வோர் மின்னணு மற்றும் சாதனங்கள் தயாரிப்பாளர்கள் பலர் கோரிக்கை வைத்துள்ளனர்.மேலும், இத்துறையினருக்கான சங்கமான சி.இ.எம்.ஏ., முழுமையாக தயாரிக்கப்பட்டு இறக்குமதி செய்யப்படும் மின்னணு சாதனங்களுக்கான வரியை அதிகரிக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளது.


இது குறித்து, சி.இ.ஏ.எம்.ஏ.,வின் தலைவர் எரிக் பிரகான்ஸா கூறியதாவது:
உள்நாட்டு தயாரிப்பாளர்களை ஊக்குவிக்கும் வகையில், வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் முழுமைபெற்ற மின்னணு சாதனங்களுக்கான இறக்குமதி வரியை அதிகரிக்க வேண்டும்.மின்னணு சாதன பாகங்களுக்கும், முழுமையாக தயாரிக்கப்பட்ட சாதனங்களுக்கும் இடையேயான இறக்குமதி வரி வித்தியாசம், 5 சதவீதம் அளவுக்கு வித்தியாசம் இருக்க வேண்டும்.மேலும், குறிப்பிட்ட ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு, மற்றும் உள்நாட்டு திட்டங்கள் ஆகியவற்றுக்கு இத்துறையில் உற்பத்தியுடன் இணைக்கப்பட்ட ஊக்க திட்டத்தையும் அறிமுகம் செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.

இதற்கிடையே பல தயாரிப்பாளர்கள் பட்ஜெட்டில் ஏசி மற்றும் பெரிய டிவிகளுக்கான ஜி.எஸ்.டி.,யை குறைக்கவேண்டும். ஏசிகளுக்கான வரியை 18 சதவீதமாக குறைக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.

மூலக்கதை