ஏர் இந்தியா நிறுவனம் டாடாவிடம் 27ல் ஒப்படைப்பு

தினமலர்  தினமலர்
ஏர் இந்தியா நிறுவனம் டாடாவிடம் 27ல் ஒப்படைப்பு


புதுடில்லி : ‘ஏர் இந்தியா’ நிறுவனத்தை மத்திய அரசு, டாடா குழுமத்திடம் இம்மாதம் 27ம் தேதியன்று ஒப்படைக்க இருப்பதாக தெரிய வந்துள்ளது.

இது குறித்து அரசின் உயரதிகாரி ஒருவர் கூறியதாவது:

இந்த வாரத்திலேயே ஏர் இந்தியா நிறுவனம், டாடா குழுமத்தின் கைகளுக்கு முழுமையாக சென்றுவிடும். வரும் 27ம் தேதியன்றுடன் டாடா குழுமத்திடம் ஒப்படைப்பதற்கான பணிகள் அனைத்தும் நிறைவுபெற்றுவிடும்.கடந்த 20ம் தேதிக்கான, ‘குளோசிங் பேலன்ஸ் ஷீட்’ டாடாவிடம் வழங்கப்பட்டுள்ளது.அது குறித்த டாடா குழுமத்தின் பரிசீலனையில் மாற்றங்கள் இருப்பின் அது சரி செய்யப்படும்.
இது குறித்த விஷயங்களை, ஏர் இந்தியாவின் நிதி இயக்குனர் வினோத் ஹெஜ்மாடி ஊழியர்களுக்கு மின்னஞ்சல் வாயிலாக தெரிவித்துள்ளார். மேலும், அடுத்த சில நாட்களுக்கு கடுமையான பணிகள் இருக்கும் என்றும், ஊழியர்களின் ஒத்துழைப்பு தேவை என்றும் மின்னஞ்சலில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இவ்வாறு அவர் கூறினார்.

நிறுவனம் கைமாறிய பிறகு, ஏர் இந்தியா, ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ், விஸ்டாரா என மூன்று சேவைகளை டாடா குழுமம் நடத்தும் என தெரியவந்து உள்ளது.

மூலக்கதை