குடியரசு தினத்தையொட்டி தமிழகத்தை சேர்ந்த 2 காவல்துறை அதிகாரிகளுக்கு ஜனாதிபதி பதக்கம்!: ஒன்றிய அரசு அறிவிப்பு

தினகரன்  தினகரன்
குடியரசு தினத்தையொட்டி தமிழகத்தை சேர்ந்த 2 காவல்துறை அதிகாரிகளுக்கு ஜனாதிபதி பதக்கம்!: ஒன்றிய அரசு அறிவிப்பு

டெல்லி: குடியரசு தினத்தையொட்டி தமிழகத்தை சேர்ந்த 2 காவல்துறை அதிகாரிகளுக்கு ஜனாதிபதி பதக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. நாட்டின் 73வது குடியரசு தினம் நாளை நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. இந்த நிலையில் குடியரசு தினத்தையொட்டி தமிழகம் உட்பட நாடு முழுவதும் 939 காவல்துறையினருக்கு பதக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, தமிழக காவல் அதிகாரி ஏ.டி.ஜி.பி. வெங்கடராமன் மற்றும் சி.பி.சி.ஐ.டி. காவல் ஆய்வாளர் சிவனருள் ஆகியோர் ஜனாதிபதி பதக்கம் பெறவுள்ளனர். தமிழ்நாட்டைச் சேர்ந்த மேலும் 18 காவல் அதிகாரிகளுக்கு மெச்சத்தகுந்த பணிக்கான விருது அறிவிக்கப்பட்டிருக்கிறது. அதன் விவரம் பின்வருமாறு;* திருச்சி மத்திய மண்டல ஐ.ஜி. வி.பாலகிருஷ்ணன், சென்னை போக்குவரத்து கூடுதல் ஆணையர் பிரதீப் குமாருக்கு பதக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. * கோவை மேற்கு மண்டல ஐ.ஜி. ஆர்.சுதாகர், சென்னை ஏ.ஐ.ஜி.சவரணன், கியூ பிரிவு எஸ்.பி. கண்ணம்மாளுக்கு பதக்கம் அறிவிப்பு. * சென்னை போக்குவரத்து துணை ஆணையர் சுரேந்திரநாத், கியூ பிரிவு சி.ஐ.டி. ஆய்வாளர் கே.அண்ணாத்துரைக்கு பதக்கம் அறிவிக்கப்பட்டிருக்கிறது.* மணிமுத்தாறு தமிழ்நாடு சிறப்பு போலீஸ் கமாண்டர் கார்த்திகேயனுக்கு பதக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. * சென்னை போதைப்பொருள் தடுப்பு பிரிவு சி.ஐ.டி. கூடுதல் எஸ்.பி. தாமஸ் பிரபாகரனுக்கு பதக்கம் அறிவிப்பு.* வங்கி மோசடி புலனாய்வு பிரிவு உதவி ஆணையர் பிரபாகரன், உளவுப்பிரிவு உதவி ஆணையர் முருகவேளுக்கு பதக்கம் அறிவிக்கப்பட்டிருக்கிறது.* கோவை குற்றப்பிரிவு டி.எஸ்.பி. முரளிதரன், கடலூர் லஞ்சஒழிப்பு காவல் ஆய்வாளர் சண்முகமும் பதக்கம் பெறுகிறார். * கோவை போக்குவரத்து திட்டமிடல் கூடுதல் துணை ஆணையர் இளங்கோவன், சென்னை மத்திய குற்றப்பிரிவு ஆய்வாளருக்கு பதக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது.

மூலக்கதை