'யார் ஆட்சியில் யார் படம் வைப்பது': முன்னாள் முதல்வர்கள் படம் அகற்றம்

தினமலர்  தினமலர்
யார் ஆட்சியில் யார் படம் வைப்பது: முன்னாள் முதல்வர்கள் படம் அகற்றம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

காரைக்குடி : சிவகங்கை மாவட்டம் காரைக்குடி ஆவின் நிறுவனத்தில் இருந்த முன்னாள் முதல்வர்கள் ஜெயலலிதா, பழனிச்சாமி, பன்னீர் செல்வம் படங்களை தி.மு.க., வினர் அகற்ற கூறியதால் அவை அப்புறப்படுத்தப்பட்டன.

காரைக்குடி ஆவின் நிறுவனத்தில், ஆய்வுக் கூட்டம், நலத்திட்ட உதவி வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. பால்வளத்துறை அமைச்சர் நாசர், ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் பெரியகருப்பன் கலந்து கொண்டனர். ஆவின் தலைவராக அ.தி.மு.க., வைச் சேர்ந்த அசோகன் உள்ளார். அவர் நிகழ்ச்சியில் பங்கேற்கவில்லை.

நிகழ்ச்சி நடந்த போது ஆவின் சேர்மன் அறைக்குள் தி.மு.க.,வினர் சென்றனர். அங்கு முன்னாள் முதல்வர்கள் படங்கள் இருந்தன. முதல்வர் ஸ்டாலின் படம் இல்லை. அ.தி.மு.க., வினர் படங்களை பார்த்த தி.மு.க.,வினர் அங்கிருந்த அலுவலர்களிடம் யார் ஆட்சியில் யார் படத்தை வைப்பது, உடனடியாக படத்தை அகற்றுங்கள் எனக்கூறினர். ஆவின் பணியாளர்கள் மூன்று படங்களையும் உடனடியாக அகற்றினர்.

காரைக்குடி : சிவகங்கை மாவட்டம் காரைக்குடி ஆவின் நிறுவனத்தில் இருந்த முன்னாள் முதல்வர்கள் ஜெயலலிதா, பழனிச்சாமி, பன்னீர் செல்வம் படங்களை தி.மு.க., வினர் அகற்ற கூறியதால் அவை

சமரசத்துக்கு இடமளிக்காமல்... அதிகாரத்துக்கு அடிபணியாமல்... நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்...

ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.

நன்றி. தினமலர்

இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.

You’ll usually find this icon in the upper right-hand corner of your screen. You may have more than one ad blocker installed.

You may have to select a menu option or click a button.

மூலக்கதை