கடலில் 18 கி.மீ. நீச்சல்: சென்னை சிறுமி உலக சாதனை

தினகரன்  தினகரன்
கடலில் 18 கி.மீ. நீச்சல்: சென்னை சிறுமி உலக சாதனை

சென்னை: கடலில் பிளாஸ்டிக் கழிவுகளால் பல்வேறு உயிரினங்கள் பாதிக்கப்படுவது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில்,  சென்னை சிறுமி தாரகை ஆராதனா 18 கி.மீ. தூரம் கடலில் நீச்சல் அடித்து உலக சாதனை படைத்தார். கோவளம் முதல் நீலாங்கரை வரையிலான 18 கி.மீ. தூரத்தை 6 மணி, 14 நிமிடங்களில் கடந்து சாதித்த ஆராதனாவுக்கு (8 வயது) அசிஸ்ட் வேர்ல்டு ரெக்கார்டு என்ற உலக சாதனை நிறுவனம் அங்கீகரித்து சான்றிதழ் வழங்கியது. இந்த சான்றிதழை விஜிபி குழும தலைவர் வி.ஜி.சந்தோஷம் வழங்கினார். சிறுமியின் தந்தை அரவிந்த் ஆழ்கடல் பயிற்சியாளர் என்பதால் கடந்த 3 வருடங்களாக தீவிர பயிற்சி மேற்கொண்டு இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளார். சிறு வயது முதலே கடற்கரையில் நடைபயிற்சி மேற்கொள்ளும் போதும் கடலிலும், கடற்கரையிலும் அதிகப்படியான பிளாஸ்டிக் கழிவுகள் இருப்பதை கண்டு அதன் தாக்கத்தினால் இப்படி ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தி சாதனையை படைத்துள்ளார். இது குறித்து ஆராதனா கூறுகையில், இதுவரை 600 கிலோ பிளாஸ்டிக் கழிவுகளை சேகரித்து வைத்துள்ளதாகவும்,  அதனை விற்று கிடைக்கும் பணத்தை தமிழக முதல்வரிடம் கொடுத்து பிளாஸ்டிக்கை ஒழிக்க வழியுறுத்த உள்ளதாகவும் தெரிவித்தார்.

மூலக்கதை