ரூ.99 கோடி குடிநீர் திட்டம் செயல்பாட்டுக்கு வந்தது: குழாயில் 'அருவி!' திருப்பூர், பல்லடம் ஒன்றிய கிராமங்களுக்கு பயன்

தினமலர்  தினமலர்
ரூ.99 கோடி குடிநீர் திட்டம் செயல்பாட்டுக்கு வந்தது: குழாயில் அருவி! திருப்பூர், பல்லடம் ஒன்றிய கிராமங்களுக்கு பயன்

திருப்பூர்:மேட்டுப்பாளையம் கூடுதல் குடிநீர் திட்டத்தால், திருப்பூர், பல்லடம் ஒன்றியத்துக்கு உட்பட்ட, ஆறு ஊராட்சிகளின் குடிநீர் தேவை பூர்த்தியாகுமென, பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
கடந்த, அ.தி.மு.க., ஆட்சியில், 2050 வரை, குடிநீர் தேவையை சமாளிக்கும் வகையில், மேட்டுப்பாளையம் பவானி ஆற்றில் இருந்து, மாநகராட்சிக்கு குடிநீர் எடுக்கும் நான்காவது திட்டம் உருவாக்கப்பட்டது. அதை தொடர்ந்து, அவிநாசி பேரூராட்சி, திருப்பூர், பல்லடம் ஒன்றிய பகுதிக்கும், தரமான மேட்டுப்பாளையம் குடிநீரை வழங்க வேண்டுமென, மூன்று கூட்டுக்குடிநீர் திட்டங்கள் உருவாக்கப்பட்டன.
சிறுமுகை அருகே, பவானி ஆற்றில் இருந்து தண்ணீர் எடுத்து, அவிநாசி பேரூராட்சி, மோப்பிரிபாளையம் பேரூராட்சி மற்றும் சூலுார் விமானப்படைத்தளத்துக்கு ஒரு திட்டம்; திருப்பூர் ஒன்றியத்தின், 10 ஊராட்சிகளுக்கு மற்றொரு திட்டமும் உருவாக்கப்பட்டது.
முன்னதாக, மாநகராட்சியை ஒட்டியுள்ள, திருப்பூர் ஒன்றியத்தில், மங்கலம், இடுவாய், முதலிபாளையம் ஊராட்சிகளில், 70 குடியிருப்பு பகுதி; பல்லடம் ஒன்றியத்தில், ஆறுமுத்தாம்பாளையம், கரைப்புதுார், கணபதிபாளையம் ஊராட்சிகளில்,85 குடியிருப்பு பகுதிகள் என, 155 குடியிருப்பு பகுதிகளுக்கு, 99.24 கோடி ரூபாய் மதிப்பீட்டில், மற்றொரு கூட்டுக்குடிநீர் திட்டம் அறிவிக்கப்பட்டது.
இத்திட்டத்தில், அவிநாசி சந்தை பகுதியில் உள்ள தொட்டியில் இருந்து, ஆறு ஊராட்சிகளில் அமைந்துள்ள, 13.45 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட, 38 தரைமட்ட தொட்டிகளுக்கு, நீரேற்றம் செய்யப்பட உள்ளது.தமிழக முதல்வர் ஸ்டாலின், 'வீடியோ கான்பரன்ஸ்' மூலம், இத்திட்ட பணிகளை பயன்பாட்டுக்கு அர்ப்பணித்தார். அமைச்சர்கள் சாமிநாதன், கயல்விழி உள்ளிட்டோர் பங்கேற்றனர். பல்லடம் டி.ஆர்.ஜி., மண்டபத்தில் நடந்த விழாவில், கலெக்டர் வினீத், குடிநீர் வடிகால் வாரிய செயற்பொறியாளர் ரங்கராஜன் ஆகியோர், திட்ட செயல்பாடு, குடிநீர் வினியோகம் குறித்து விளக்கினர்.பல்லடம் ஒன்றிய தலைவர் தேன்மொழி மற்றும் ஊராட்சி தலைவர்கள் பங்கேற்றனர்.
குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் கூறுகையில், ''ஆறு ஊராட்சிகளில், 244 மேல்நிலை தொட்டிகள் உள்ளன. புதிதாக கட்டிய, 38 தரை நீர்த்தேக்க தொட்டிகளுக்கு, 88.33 கி.மீ., நீளத்தில் குழாய்கள் பதிக்கப்பட்டுள்ளன. மேலும், 128.37 கி.மீ., தொலைவில் பகிர்மான குழாய் பதித்து, மக்களுக்கு வினியோகிக்கப்பட உள்ளது.கூட்டு குடிநீர் திட்டத்தின் வாயிலாக, ஆறு ஊராட்சிகளை சேர்ந்த, 1.92 லட்சம் மக்களுக்கு, தினமும், 80.70 லட்சம் லிட்டர் குடிநீர் கிடைக்கும். கூடுதல் தண்ணீர் கிடைக்கும் என்பதால், வரும், 2050ம் ஆண்டு வரையில், கிராமப்புற மக்களுக்கான குடிநீர் தேவைகள் பூர்த்தியாகும்'' என்றார்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.
**குடிநீர் திட்டம் குறித்து குடிநீர் வடிகால் வாரிய செயற்பொறியாளர் ரங்கராஜன் விளக்கமளித்தார். அருகில், கலெக்டர் வினீத்சுவையான குடிநீர் கிடைக்கும்கிராமப்பகுதிகளுக்கு வினியோகம் செய்யப்படும், காவிரி குடிநீர் சுவையானதாக இல்லை; எளிதில் புழு பிடித்துவிடுகிறது. சுவையான மேட்டுப்பாளையம் குடிநீர் என்பது, கிராமப்புற மக்களின் கனவாகவே இருந்தது. நீண்ட இடைவெளிக்கு பிறகு, கலப்படம் இல்லாத, சுவையான, மேட்டுப்பாளையம் குடிநீர், ஆறு கிராமங்களின் கடைகோடி வரை கிடைக்கும் என, மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

திருப்பூர்:மேட்டுப்பாளையம் கூடுதல் குடிநீர் திட்டத்தால், திருப்பூர், பல்லடம் ஒன்றியத்துக்கு உட்பட்ட, ஆறு ஊராட்சிகளின் குடிநீர் தேவை பூர்த்தியாகுமென, பொதுமக்கள் மகிழ்ச்சி

சமரசத்துக்கு இடமளிக்காமல்... அதிகாரத்துக்கு அடிபணியாமல்... நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்...

ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.

நன்றி. தினமலர்

இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.

You’ll usually find this icon in the upper right-hand corner of your screen. You may have more than one ad blocker installed.

You may have to select a menu option or click a button.

மூலக்கதை