ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: 4வது சுற்றில் ஸ்வியாடெக்

தினகரன்  தினகரன்
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: 4வது சுற்றில் ஸ்வியாடெக்

மெல்போர்ன்: ஆஸ்திரேலிய ஓபன் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவு 4வது சுற்றில் விளையாட, போலந்து வீராங்கனை இகா ஸ்வியாடெக் தகுதி பெற்றார்.மூன்றாவது சுற்றில் ரஷ்யாவின் டாரியா கசட்கினாவுடன் (24 வயது, 23வது ரேங்க்) நேற்று மோதிய ஸ்வியாடெக் (20 வயது, 9வது ரேங்க்) 6-2, 6-3 என்ற நேர் செட்களில் எளிதாக வென்று காலிறுதிக்கு முந்தைய சுற்றில் நுழைந்தார். இப்போட்டி 1 மணி, 35 நிமிடத்தில் முடிவுக்கு வந்தது. முன்னணி வீராங்கனைகள் சிமோனா ஹாலெப், சொரானா சிர்ஸ்டீ (ருமேனியா), டேனியலி கோலின்ஸ் (அமெரிக்கா), கயா கானெபி (எஸ்டோனியா), ஆலிஸ் கார்னெட் (பிரான்ஸ்), எலிஸ் மெர்டன்ஸ் (பெல்ஜியம்) ஆகியோரும் 4வது சுற்றுக்கு முன்னேறி உள்ளனர்.ஆண்கள் ஒற்றையர் பிரிவு 3வது சுற்றில் நேற்று களமிறங்கிய கிரீஸ் வீரர் ஸ்டெபனோஸ் சிட்சிபாஸ் 6-3, 7-5, 6-7 (2-7), 6-4 என்ற செட் கணக்கில் பிரான்சின் பெனாய்ட் பேரை வீழ்த்தினார். அமெரிக்காவின் டெய்லர் பிரிட்ஸ் 6-0, 3-6, 3-6, 6-4, 6-3 என்ற செட் கணக்கில் ஸ்பெயினின் பாடிஸ்டா அகுத்தை போராடி வென்று 4வது சுற்றுக்கு தகுதி பெற்றார்.ரஷ்ய நட்சத்திரம் டானில் மெட்வதேவ், இத்தாலியின் யானிக் சின்னர், பெலிக்ஸ் ஆகர் அலியஸ்ஸிம் (கனடா), மரின் சிலிச் (குரோஷியா), அலெக்ஸ் டி மினார் (ஆஸி.) ஆகியோரும் காலிறுதிக்கு முந்தைய 4வது சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளனர்.

மூலக்கதை