ஜம்மு காஷ்மீரில் தொகுதி வரையறைக்கு பிறகு தேர்தல்; இயல்புநிலைக்கு பின் மாநில அந்தஸ்து: அமைச்சர் அமித்ஷா தகவல்

தினகரன்  தினகரன்
ஜம்மு காஷ்மீரில் தொகுதி வரையறைக்கு பிறகு தேர்தல்; இயல்புநிலைக்கு பின் மாநில அந்தஸ்து: அமைச்சர் அமித்ஷா தகவல்

புதுடெல்லி: ‘ஜம்மு காஷ்மீரில் தொகுதி வரையறைக்கு பிறகு சட்டப்பேரவைத் தேர்தல் நடத்தப்படும். இயல்புநிலை திரும்பிய பின்னரே மீண்டும் மாநில அந்தஸ்து வழங்கப்படும்,’ என்று ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்தார்.நாட்டின் முதல், `சிறந்த மாவட்ட நிர்வாக குறியீட்டை’ ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா நேற்று காணொலி மூலம் வெளியிட்டு பேசியதாவது: ஜம்மு காஷ்மீரின் மேம்பாட்டிற்கான பல்வேறு நடவடிக்கைகளுக்கு பிரதமர் மோடி முக்கியத்துவம் அளிக்கிறார். இங்கு ஜனநாயகத்தை நிலை நாட்டும் நோக்கத்துடன், தொகுதி வரையறைக்கு பிறகு சட்டப்பேரவைத் தேர்தல் நடத்தவும், இயல்புநிலை திரும்பிய பின்னர் மீண்டும் மாநில அந்தஸ்து வழங்கவும் அரசு முடிவு செய்துள்ளது. தற்போது, காஷ்மீரில் ₹12,000 கோடி முதலீடு செய்யப்பட்டுள்ளது. காஷ்மீரின்  வளர்ச்சியில் பங்கெடுங்கும்படி இளைஞர்களை கேட்டு கொள்கிறேன். இவ்வாறு அவர் பேசினார்.

மூலக்கதை