மோப்ப நாய் ரேம்போ உயிரிழப்பு: எஸ்பி அஞ்சலி

தினகரன்  தினகரன்
மோப்ப நாய் ரேம்போ உயிரிழப்பு: எஸ்பி அஞ்சலி

திருவள்ளூர்: மாவட்ட காவல் துறையில் துப்பறியும் மோப்ப நாய் ரேம்போ கடந்த 17.12.2009ல் பணியில் சேர்க்கப்பட்டது. தொடர்ந்து கடந்த 11 ஆண்டுகளாக சுமார் 257 குற்ற சம்பவங்களில் குற்ற புலனாய்வுக்கு சேவை புரிந்தது. இந்நிலையில், உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் கடந்த 22.3.2021 அன்று மோப்ப நாய் ரேம்போவிற்கு பணி ஓய்வு அளிக்கப்பட்டது. ரேம்போ உடல் நலக்குறைவு மற்றும் வயது மூப்பு காரணமாக நேற்று உயிரிழந்தது. தொடர்ந்து மோப்ப நாய் படைப்பிரிவின் அருகே உள்ள மைதானத்தில் வைத்து மாவட்ட போலீஸ் எஸ்பி வருண்குமார் மலர் மாலை வைத்து அஞ்சலி செலுத்தினார். பிறகு ரேம்போவின் உடல் காவல் துறை மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது. ரேம்போ அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் நினைவு பலகையும் வைக்கப்பட்டுள்ளது.

மூலக்கதை