ஏரியில் மீனவர் மாயம்

தினகரன்  தினகரன்
ஏரியில் மீனவர் மாயம்

திருவள்ளூர்: பூண்டி ஒன்றியம் கொழுந்தலூர் கிராமத்தை சேர்ந்தவர் விஜயன்(30). இவருக்கு எஸ்தர் என்ற மனைவியும், குகன்(7) என்ற மகனும், சுப்ரியா(5) என்ற மகளும் உள்ளனர். இவர் மீன் பிடிக்கும் தொழில் செய்துவந்தார். இந்நிலையில், விஜயன் வழக்கம்போல் நேற்று காலை பூண்டி ஏரியில் படகில் மீன்பிடிக்க சென்றார். வெகுநேரமாக வீடு திரும்பவில்லை.பூண்டி ஏரியில் அவரது உறவினர்கள் வந்து பார்த்தபோது படகு மட்டும் இருப்பதையும் விஜயன் மாயமாக உள்ளதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். புகாரின்படி புல்லரம்பாக்கம் போலீசார், தீயணைப்பு துறையினருடன் தேடி வருகின்றனர்.

மூலக்கதை