மிஷன் இம்பாசிபிள் பாகம் 7, 8 தள்ளிவைப்பு

தினகரன்  தினகரன்
மிஷன் இம்பாசிபிள் பாகம் 7, 8 தள்ளிவைப்பு

லாஸ்ஏஞ்சல்ஸ்: ஹாலிவுட் நடிகர் டாம் குரூஸ் நடித்த மிஷின் இம்பாசிபிள் படத்தின் முதல் பாகம் கடந்த 1994ம் ஆண்டு வெளியானது. இந்தப் படம் மிகப்பெரிய வெற்றிபெற்றதை அடுத்து இதுவரை இதன் 6 பாகங்கள் வெளியாகியுள்ளன.இந்நிலையில், மிஷன் இம்பாசிபிள் படத்தின் 7ம் பாகத்தை இந்த ஆண்டு செப்டம்பர் 30ம் தேதி ரிலீஸ் செய்ய திட்டமிட்டுஇருந்தனர். ஆனால், கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரொ டக்‌ஷன் பணிகள் தள்ளிப்போய்விட்டது. இதனால், 2023 ஜூலை 14ம் தேதி படம் ரிலீசாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.அதுபோல், மிஷன் இம்பாசிபிள் 8ம் பாகம் 2023ம் ஆண்டு ஜூலை 7ம் தேதி ரிலீசாகும் என்று அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில், 2024ம் ஆண்டு ஜூன் 28ம் தேதி ரிலீசாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.மிஷன் இம்பாசிபிள் பாகம் 7, 8 ஆகிய இரண்டு படங்களும் ஒரு வருடம் தள்ளிப்போனதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், உலகம் முழுக்க ரசிகர்கள்  அதிருப்தி அடைந்துள்ளனர்.

மூலக்கதை