இயக்குனர் சங்க தேர்தல் ஒத்திவைப்பு

தினகரன்  தினகரன்
இயக்குனர் சங்க தேர்தல் ஒத்திவைப்பு

சென்னை: தமிழ்நாடு திரைப்பட இயக்குனர்கள் சங்க தேர்தல் இன்று நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்த தேர்தலில் கே.பாக்யராஜ் தலைமையில் ஒரு அணியினரும், ஆர்.கே.செல்வமணி தலைமையில் ஒரு அணியினரும் போட்டியிடுகிறார்கள். கொரோனா பரவலை தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமைதோறும் தமிழக அரசு ஊரடங்கை அமல்படுத்துவதால், தேர்தல் இரண்டு நாள் தள்ளி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. அதன்படி வரும் 25ம் தேதி தேர்தல் நடைபெறும் என்று கூறப்பட்டது. ஆனால், கொரோனா பரவல் காரணமாக இதற்கு அனுமதி வழங்கப்படவில்லை. இதையடுத்து இயக்குனர்கள் சங்க தேர்தல் தேதி அறிவிக்கப்படாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

மூலக்கதை