2022-ம் ஆண்டிற்க்கான ஐபிஎல் போட்டிகள் இந்தியாவில் மட்டுமே நடைபெறும்: பிசிசிஐ தகவல்

தினகரன்  தினகரன்
2022ம் ஆண்டிற்க்கான ஐபிஎல் போட்டிகள் இந்தியாவில் மட்டுமே நடைபெறும்: பிசிசிஐ தகவல்

மும்பை: நடப்பாண்டிற்கான ஐபிஎல் போட்டிகள் இந்தியாவில் மட்டுமே நடைபெறும் என தகவல் வெளியாகியுள்ளது. அனைத்து ஐபிஎல் அணிகளுடனான ஆலோசனைக்கூட்டத்தில் பிசிசிஐ இது தொடர்பாக முடிவு செய்துள்ளது என தகவல் வெளியாகியுள்ளது. இதனை தொடர்ந்து மும்பை மற்றும் புனேவில் ஐபிஎல் போட்டிகளை பிசிசிஐ நடத்தவிருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.2022-ம் ஆண்டிற்க்கான ஐபிஎல் போட்டிகளை எங்கு நடத்துவது என்பது குறித்த ஆலோசனை அனைத்து ஐபிஎல் அணிகளின் உரிமையாளர்களிடையே காணொளி வாயிலாக இன்று நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில் இந்தியாவில் மட்டுமே ஐபிஎல் போட்டிகளை நடத்த வேண்டுமென பிசிசிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டதாகவும் ஐபிஎல் அணிகளின் உரிமையாளர்கள் ஐக்கியஅரபு நாடுகளில் போட்டிகளை நடத்தலாம் எனவும் விவாதித்ததாக தகவல் வெளியாகியுள்ள நிலையில் தற்போது மும்பை மற்றும் புனேவில் ஐபிஎல் போட்டிகள் நடைபெறும் என தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இத்தகவல் உறுதிப்படுத்தப்படும் நிலையில் இந்தியாவில் மட்டுமே ஐபிஎல் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மூலக்கதை