சிறையில் தாக்குதல்: ஏமனில் 200 பேர் பலி?

தினமலர்  தினமலர்
சிறையில் தாக்குதல்: ஏமனில் 200 பேர் பலி?

துபாய்: ஏமன் நாட்டு சிறை மீது சவுதி அரேபியா நடத்திய ஏவுகணை தாக்குதலில் 200க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

மேற்கு ஆசியாவைச் சேர்ந்த ஏமன் நாட்டில் 2015ல் ஹவுதி பயங்கரவாதிகள் அதிரடி தாக்குதல் நடத்தி, அதிபர் ஹாதியை விரட்டியடித்து தலைநகர் சனாவை கைப்பற்றினர்.அப்போதிலிருந்து ஏமனில் ராணுவத்திற்கும், பயங்கரவாதிகளுக்கும் இடையே உள்நாட்டு போர் நிகழ்ந்து வருகிறது. ராணுவத்திற்கு ஆதரவாக சவுதி அரேபியா வான்வழி தாக்குதல்களை நடத்தி வருகிறது.இந்நிலையில் நேற்று சவுதி அரேபியா போர் விமானங்கள் ஏமன் நாட்டின் சாடா மற்றும் ஹேடெய்டா நகரங்கள் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தின.

சாடா நகரில் சிறை மீது நடத்தப்பட்ட ஏவுகணை தாக்குதலில் 200க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளதாக கூறப்படுகிறது. இந்த தாக்குதல் தொடர்பாக பயங்கரவாதிகளின் தொலைக்காட்சி நிறுவனம் வீடியோ வெளியிட்டது. அதில், சிறைக் கட்டடம் இடிந்து விழுந்ததால் எழுந்த புகை மண்டலத்தில் ஆங்காங்கே இறந்து கிடந்த உடல்கள் காணப்பட்டன.

சவுதி அரேபியா போர் விமானங்கள் ஹொடெய்டா நகரில் 'டெலியேமன்' என்ற தொலைதொடர்பு நிறுவனத்திற்குச் சொந்தமான கட்டடத்தில் ஏவுகணை தாக்குதல் நடத்தின.இதில் அந்த கட்டடத்தின் அருகில் உள்ள விளையாட்டு மைதானத்தில் விளையாடிக் கொண்டிருந்த மூன்று சிறுவர்கள் உயிரிழந்தனர். அத்துடன் தொலை தொடர்பு சேவையும் துண்டிக்கப்பட்டது.

துபாய்: ஏமன் நாட்டு சிறை மீது சவுதி அரேபியா நடத்திய ஏவுகணை தாக்குதலில் 200க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.மேற்கு ஆசியாவைச் சேர்ந்த ஏமன் நாட்டில் 2015ல்

சமரசத்துக்கு இடமளிக்காமல்... அதிகாரத்துக்கு அடிபணியாமல்... நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்...

ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.

நன்றி. தினமலர்

இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.

You’ll usually find this icon in the upper right-hand corner of your screen. You may have more than one ad blocker installed.

You may have to select a menu option or click a button.

மூலக்கதை