நீட் விலக்கு மசோதா குறித்து ஒன்றிய சுகாதாரம், கல்வித்துறை அமைச்சருடன் கலந்து பேசி முடிவை தெரிவிப்பதாக அமித்ஷா கூறினார்: டி.ஆர்.பாலு பேட்டி

தினகரன்  தினகரன்
நீட் விலக்கு மசோதா குறித்து ஒன்றிய சுகாதாரம், கல்வித்துறை அமைச்சருடன் கலந்து பேசி முடிவை தெரிவிப்பதாக அமித்ஷா கூறினார்: டி.ஆர்.பாலு பேட்டி

டெல்லி: நீட் தேர்வில் தமிழ்நாட்டுக்கு உடனே விலக்கு அளிக்க வேண்டும் என்று அமித்ஷாவிடம் தமிழ்நாடு அனைத்துகட்சிக் குழு வலியுறுத்தினர். இதுகுறித்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த  டி.ஆர்.பாலு, நீட் தேர்வில் இருந்து தமிழ்நாட்டுக்கு உடனடியாக விலக்கு அளிக்க வேண்டும் என்ற கோரிக்கை மனுவை அமித்ஷாவிடம் அளித்தோம். நீட் விலக்கு மசோதா குறித்து ஒன்றிய சுகாதாரம், கல்வித்துறை அமைச்சருடன் கலந்து பேசி முடிவை தெரிவிப்பதாக அமித்ஷா கூறியுள்ளார் என்று தெரிவித்துள்ளார். தமிழகம் கோரிய நிதியை ஜனவரி 31ம் தேதிக்குள் அனுப்பி வைப்பதாக ஒன்றிய அமைச்சர் அமித்ஷா உறுதி அளித்துள்ளார் என்று குறிப்பிட்டார்.

மூலக்கதை