ஐஎன்எஸ் விக்ராந்த் மூன்றாம் கட்ட சோதனை வெற்றி

தினகரன்  தினகரன்
ஐஎன்எஸ் விக்ராந்த் மூன்றாம் கட்ட சோதனை வெற்றி

கொச்சி: ஐஎன்எஸ் விக்ராந்த் விமானம் தாங்கிக் கப்பலானது ரூ.23,000 கோடி செலவில் கொச்சி கப்பல்கட்டும் தளத்தில் கட்டப்பட்டது. 40,000 டன் எடை கொண்ட இந்த விமானம்தான் உள்நாட்டில் கட்டப்பட்ட மிகப்பெரிய மற்றும் முதல் விமானம் தாங்கி கப்பலாகும். இதன் முதல் சோதனை ஓட்டம் கடந்த ஆண்டு ஆகஸ்ட்டில் 5 நாட்களுக்கு நடந்தது. பின்னர் 2ம் கட்ட சோதனை கடந்த ஆண்டு அக்டோபரில் 10 நாட்களுக்கு நடந்தது. இதைத் தொடர்ந்து 3ம் கட்ட ஆழ்கடல் சோதனை கடந்த 9ம் தேதி தொடங்கியது. இதில், கப்பலில் இடம்பெற்றுள்ள பல்வேறு கருவிகள் பரிசோதிக்கப்பட்டன. சென்சார் கருவிகளும் பரிசோதனைக்கு உள்படுத்தப்பட்டன. இந்த பயிற்சியை விக்ராந்த் கப்பல் வெற்றிகரமாக முடித்துக் கொண்டு நேற்று முன்தினம் கொச்சி துறைமுகத்திற்கு திரும்பி இருப்பதாக பாதுகாப்பு அமைச்சக செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

மூலக்கதை