திலீப்பின் நண்பர், உறவினர் வீடுகளில் சோதனை

தினகரன்  தினகரன்
திலீப்பின் நண்பர், உறவினர் வீடுகளில் சோதனை

திருவனந்தபுரம்: நடிகை பலாத்கார வழக்கில் நடிகர் திலீப்புக்கு நாளுக்கு நாள் பிடி இறுகி வருகிறது. நேற்று இரவு திலீப்பின் நண்பரும், பங்குதாரருமான சரத் மற்றும் தங்கை கணவர் சூரஜ் ஆகியோரின் வீடுகளில் குற்றப்பிரிவு போலீசார் திடீர் சோதனை நடத்தினர். சரத்தின் வீடு எர்ணாகுளம் அருகே உள்ள ஆலுவாவிலும், சூரஜின் வீடு கொச்சியிலும் உள்ளது. இந்த இரு வீடுகளிலும் குற்றப்பிரிவு எஸ்.பி.மோகனசந்திரன் தலைமையில் சோதனை நடத்தப்பட்டது. 6  மணி நேரம் நடந்த சோதனையில் சில முக்கிய ஆவணங்கள் சிக்கியுள்ளதாக கூறப்படுகிறது.

மூலக்கதை