மனைவி ஐஸ்வர்யாவை விவாகரத்து செய்தார் தனுஷ்

தினமலர்  தினமலர்
மனைவி ஐஸ்வர்யாவை விவாகரத்து செய்தார் தனுஷ்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

சென்னை : நடிகர் தனுஷ் மனைவி ஐஸ்வர்யாவை விவாகரத்து செய்வதாக அறிவித்துள்ளார். ஐஸ்வர்யாவும் விவாகரத்தை உறுதி செய்துள்ளார்.

கோலிவுட்டின் முன்னணி நடிகர்களில் ஒருவர் தனுஷ். இயக்குனர் கஸ்துாரி ராஜாவின் இளைய மகனான இவர், தன் 16 வயதில் நடிக்க வந்தார். 2004ல் ரஜினியின் மூத்த மகள் ஐஸ்வர்யாவை திருமணம் செய்தார்.

இவர்களுக்கு யாத்ரா, லிங்கா என இரண்டு மகன்கள் உள்ளனர். பாலிவுட், ஹாலிவுட், தற்போது தெலுங்கு என ஒரே நேரத்தில் பன்மொழிகளில் நடித்து வருகிறார். நடிகராக மட்டுமின்றி, பாடகர், தயாரிப்பாளர் மற்றும் இயக்குனராக வலம் வரும் தனுஷ், ரஜினி நடித்த காலா படத்தையும் தயாரித்திருந்தார்.

சமீபத்தில் ரஜினி நடிக்கும் படத்தை தனுஷ் இயக்க போவதாகவும் செய்திகள் உலா வந்தன. இந்நிலையில் திருமணமாகி 18 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில் மனைவி ஐஸ்வர்யாவை பிரிவதாக தனுஷ் அறிவித்துள்ளார். தனுஷ் வெளியிட்ட அறிவிப்பில், ‛18 ஆண்டுகளாக நண்பர்களால், துணையாக, பெற்றோர்களாக வாழ்ந்தோம்.

தற்போது நாங்கள் ஒன்றாக பிரிய உள்ளோம். எங்களை நாங்கள் புரிந்து கொள்ள இந்த பிரிவை ஏற்படுத்தியுள்ளோம். எங்களது இந்த பிரிவை ஏற்றுக் கொள்ளுங்கள்' என தெரிவித்துள்ளார். ஐஸ்வர்யாவும் விவாகரத்தை உறுதி செய்து அதே அறிவிப்பை வெளியிட்டுள்ளார். ரஜினியின் இளைய மகள் சவுந்தர்யாவும் முதல் கணவரை விவாகரத்து செய்தார். சமீபத்தில் இரண்டாவது திருமணமும் செய்து கொண்டார்.


சென்னை : நடிகர் தனுஷ் மனைவி ஐஸ்வர்யாவை விவாகரத்து செய்வதாக அறிவித்துள்ளார். ஐஸ்வர்யாவும் விவாகரத்தை உறுதி செய்துள்ளார்.கோலிவுட்டின் முன்னணி நடிகர்களில் ஒருவர் தனுஷ். இயக்குனர்

சமரசத்துக்கு இடமளிக்காமல்... அதிகாரத்துக்கு அடிபணியாமல்... நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்...

ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.

நன்றி. தினமலர்

இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.

You’ll usually find this icon in the upper right-hand corner of your screen. You may have more than one ad blocker installed.

You may have to select a menu option or click a button.

மூலக்கதை