பஞ்சாப் சட்டசபை தேர்தல் தேதி... மாற்றம்! பிப்., 14க்கு பதிலாக 20ல் ஓட்டுப்பதிவு

தினமலர்  தினமலர்
பஞ்சாப் சட்டசபை தேர்தல் தேதி... மாற்றம்! பிப்., 14க்கு பதிலாக 20ல் ஓட்டுப்பதிவு

புதுடில்லி ;பஞ்சாப் சட்டசபை தேர்தல் நாளாக அறிவிக்கப்பட்ட பிப்., 14ம் தேதியை ஒட்டி, சீக்கிய மத தலைவர் குரு ரவிதாஸ் ஜெயந்தி விழா வருவதால், தேர்தல் தேதியை மாற்றும்படி பா.ஜ., உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகள் கோரிக்கை விடுத்தன. இதை ஏற்று,பஞ்சாப் சட்டசபை தேர்தல் தேதியை பிப்., 20க்கு மாற்றி தேர்தல் ஆணையம் நேற்று அறிவிப்பு வெளியிட்டது.
உத்தர பிரதேசம், பஞ்சாப், உத்தரகண்ட், கோவா, மணிப்பூர் சட்டசபை தேர்தல்கள் அடுத்த மாதம் நடக்கின்றன.இதில் உ.பி., சட்டசபை தேர்தலுக்கான ஓட்டுப்பதிவு, அடுத்த மாதம் 10ல் துவங்கி மார்ச் 7 வரை ஏழு கட்டங்களாக நடக்கின்றன.


கோரிக்கைமணிப்பூரில் பிப்., 27 மற்றும் மார்ச் 3ல் இரண்டு கட்டங்களாக ஓட்டுப்பதிவு நடக்கின்றன. 'பஞ்சாப், உத்தரகண்ட், கோவா சட்டசபை தேர்தல்கள் பிப்., 14ல் ஒரே கட்டமாக நடத்தி முடிக்கப்பட்டு, ஐந்து மாநில தேர்தல்களில் பதிவான ஓட்டுகள் மார்ச் 10ல் எண்ணப்பட்டு முடிவுகள்அறிவிக்கப்படும்' என தேர்தல் ஆணையம் சமீபத்தில் அறிவித்தது.இந்நிலையில் சீக்கிய மத தலைவரான குரு ரவிதாஸ் ஜெயந்தி விழா ஆண்டுதோறும் பிப்., 16ல் கொண்டாடப்படுகிறது. உ.பி.,யின் வாரணாசியில் இந்த விழா கொண்டாடப்படுவது வழக்கம். இதற்காக குரு ரவிதாஸ் பக்தர்கள், பஞ்சாபில் இருந்து வாரணாசிக்கு பயணித்து அங்கு ஜெயந்தி விழாவை கொண்டாடிவிட்டு திரும்புவர்.பஞ்சாப் சட்டசபை தேர்தல் ஓட்டுப்பதிவு பிப்., 14ல் அறிவிக்கப்பட்டுள்ளதால், குரு ரவிதாஸின் லட்சக்கணக்கான பக்தர்கள் ஓட்டளிக்க முடியாத நிலை ஏற்பட்டது.எனவே தேர்தல் தேதியை மாற்றும்படி காங்.,கை சேர்ந்த பஞ்சாப் முதல்வர் சரண்ஜித் சிங் சன்னி, பா.ஜ., மற்றும் பகுஜன் சமாஜ் உள்ளிட்ட கட்சியினர் தேர்தல் ஆணையத்திடம் கோரிக்கை விடுத்தனர்.இது குறித்து தேர்தல் ஆணையம் நேற்று வெளியிட்ட அறிக்கை:குரு ரவிதாஸின் பிறந்த நாள் ஜெயந்தி விழா, பிப்., 16ல் கொண்டாடப்படுவதால், பஞ்சாப் தேர்தல் தேதியை அதற்கு பிறகு மாற்றக் கோரி அரசியல் கட்சிகள், சமூக அமைப்புகள் உட்பட பல்வேறுதரப்பில் இருந்தும் கோரிக்கைகள் வைக்கப்பட்டன.

பிப்., 1 கடைசி நாள்இது குறித்து பஞ்சாப் மாநில அரசு, மாநில தலைமை தேர்தல் அதிகாரி உள்ளிட்டோரின் கருத்துகளும் பெறப்பட்டு அதன் அடிப்படையில் சட்டசபை தேர்தல் தேதிகள் மாற்றப்பட்டுஉள்ளன.இதன்படி பஞ்சாப் சட்டசபை தேர்தல் பிப்., 14க்கு பதிலாக பிப்., 20ல் ஒரே கட்டமாக நடத்தி முடிக்கப்படும். இதற்கான அறிவிக்கை இம்மாதம் 25ல்வெளியிடப்படும். பிப்., 1 வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசி நாள். பிப்., 2ல் வேட்பு மனுக்கள் பரிசீலிக்கப்படும். வேட்பு மனுக்களை திரும்ப பெற பிப்., 4 கடைசி நாள்.ஓட்டுகள் மார்ச் 10ல் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மீண்டும் காங்கிரஸ்: லாரென்கோ விருப்பம்பா.ஜ., ஆட்சி நடக்கும் கோவாவில் அடுத்த மாதம் சட்டசபை தேர்தல் நடக்கவுள்ளது. இந்த மாநில காங்., தலைவராக இருந்த அலெக்ஸோ ரெஜினால்டோ லாரென்கோ, அக்கட்சியில் இருந்து கடந்த மாதம் விலகி திரிணமுல் காங்.,கில் இணைந்தார்.இந்நிலையில் திரிணமுல் காங்.,கில் இருந்தும் காரணம் குறிப்பிடாமல் நேற்று முன்தினம் விலகினார். இது குறித்து செய்தியாளர்களிடம் அவர் நேற்று கூறியதாவது:கோவாவுக்கு புதிய விடியலை தருவேன் என வாக்குறுதி அளித்து இருந்ததால், காங்.,கில் இருந்து விலகி திரிணமுல் காங்.,கில் இணைந்தேன். இந்த முடிவுக்கு என் ஆதரவாளர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.வெளி மாநிலத்தை சேர்ந்த கட்சியை கோவாவுக்குள் அனுமதித்தால் ஓட்டு பிரிந்துவிடும் என எச்சரித்தனர். என் முடிவுக்கு வருந்துகிறேன். மக்கள் நம்பும் அதே பழைய நபராகவே இருக்க விரும்புகிறேன். மீண்டும் காங்.,கில் இணையும்படி என் ஆதரவாளர்கள் தெரிவித்து வருகின்றனர். அவர்கள் சொல்வதைகேட்பேன்.இவ்வாறு அவர் கூறினார்.

யாருக்கெல்லாம் தபால் ஓட்டு?அடுத்த மாதம் நடக்கவுள்ள ஐந்து மாநில சட்டசபை தேர்தலில், எந்தெந்த அத்தியாவசிய துறைகளில் பணியாற்றுபவர்கள் தபால் ஓட்டு அளிக்க முடியும் என்பது குறித்து தலைமை தேர்தல் ஆணையம் வெளியிட்ட அறிக்கை:தகவல் மற்றும் மக்கள் தொடர்பு துறை, சுகாதாரம், போக்குவரத்து, தபால் துறை, ரயில்வே, மின் துறை, மெட்ரோ ரயில், விமானப் போக்குவரத்து, துார்தர்ஷன், அகில இந்திய வானொலி, பி.எஸ்.என்.எல்., ஆகியவற்றின் பணியாளர்களுக்கு தபால் ஓட்டு வசதி அளிக்கப்படும். கொரோனா அவசர பணியில் ஈடுபட்டுள்ள ஊழியர்களும் தபால் ஓட்டு அளிக்கலாம்.பஞ்சாப், உத்தரகண்ட், மணிப்பூர், கோவாவில் தேர்தல் பணியில் அதிகாரப்பூர்வமாக ஈடுபடும் பத்திரிகையாளர்கள் தபால் ஓட்டுஅளிக்கலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தொகுதி அதே தான்; கட்சி தான் வேறஉத்தரகண்ட் மாநில காங்., மகளிர் அணி தலைவியும், நைனிடால் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ.,வுமான சரிதா ஆர்யா, முதல்வர்புஷ்கர் சிங் தாமி முன்னிலையில் நேற்று பா.ஜ.,வில் இணைந்தார்.கடந்த 2017ல் நடந்த தேர்தலில் நைனிடால் தொகுதியில் காங்., சார்பில் சரிதா ஆர்யாவும், பா.ஜ., சார்பில் சஞ்சீவ் ஆர்யாவும் போட்டியிட்டனர். சரிதா தோல்வியடைந்தார்.வெற்றி பெற்ற சஞ்சீவ் இப்போது காங்.,கில் இருக்கிறார். அடுத்த மாதம் நடக்கும் சட்டசபை தேர்தலில், நைனிடால் தொகுதியில் சஞ்சீவுக்கு சீட் வழங்க காங்., முடிவு செய்துள்ள நிலையில், பா.ஜ., சார்பில் சரிதா களம் இறக்கப்படுவார்என்பதும் உறுதியாகியுள்ளது. இதற்கிடையில், சரிதாவை அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்து பொறுப்பிலும் இருந்தும் ஆறு ஆண்டுகளுக்கு நீக்கியிருப்பதாக காங்., அறிவித்துள்ளது.

புதுடில்லி ;பஞ்சாப் சட்டசபை தேர்தல் நாளாக அறிவிக்கப்பட்ட பிப்., 14ம் தேதியை ஒட்டி, சீக்கிய மத தலைவர் குரு ரவிதாஸ் ஜெயந்தி விழா வருவதால், தேர்தல் தேதியை மாற்றும்படி பா.ஜ., உள்ளிட்ட பல்வேறு

சமரசத்துக்கு இடமளிக்காமல்... அதிகாரத்துக்கு அடிபணியாமல்... நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்...

ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.

நன்றி. தினமலர்

இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.

You’ll usually find this icon in the upper right-hand corner of your screen. You may have more than one ad blocker installed.

You may have to select a menu option or click a button.

மூலக்கதை