சமாஜ்வாதியின் வேட்பாளர் பட்டியல் குற்றவாளிகளின் பட்டியலாகவே உள்ளது: முதல்வர் யோகி ஆதித்யநாத் சாடல்

தினகரன்  தினகரன்
சமாஜ்வாதியின் வேட்பாளர் பட்டியல் குற்றவாளிகளின் பட்டியலாகவே உள்ளது: முதல்வர் யோகி ஆதித்யநாத் சாடல்

லக்னோ: சமாஜ்வாதி கட்சி வெளியிட்டுள்ள வேட்பாளர் பட்டியல் குற்றவாளிகளின் பட்டியலாகவே உள்ளது என்று அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் கடுமையாக சாடியுள்ளார். உத்தரபிரதேசத்தில் மொத்தமுள்ள 403 சட்டமன்ற தொகுதிகளுக்கான தேர்தல் அடுத்த மாதம் 10ம் தேதி முதல் 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. இங்கு ஆளும் பாஜ, எதிர்க்கட்சியான சமாஸ்வாதி இடையே கடுமையான போட்டி நிலவி வருகிறது. இந்நிலையில் சமாஜ்வாதி கட்சி சார்பில் வெளியிட்ட வேட்பாளர் பட்டியலில் குற்ற பின்னணி உடையவர்கள் பலர் இடம் பெற்றுள்ளனர் என்று ஆளுங்கட்சியான பாஜ கடுமையாக விமர்சித்து வருகிறது.இதுதொடர்பாக அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறுகையில், பாஜ வெளியிட்ட வேட்பாளர் பட்டியல் சமூக நீதி, மாநிலத்தில் அனைத்து தரப்பினரின் பிரதிநிதித்துவத்தை உறுதிபடுத்துவதாக உள்ளது. அதே நேரத்தில் சமாஜ்வாதி கூட்டணி வெளியிட்ட வேட்பாளர் பட்டியல், குற்றவாளிகளின் பட்டியலாகவே உள்ளது. இது சமாஜ்வாதி மற்றும் அதன் கூட்டணி கட்சிகளின் தரத்தை வெளிக்காட்டுவதாக உள்ளது. குற்றவாளிகள், குண்டர்களை வைத்து மக்களை சுரண்டுவதுதான் அவர்களின் ஆட்சியில் முன்பு நடந்துள்ளது. அதே பாணியில் இந்த முறையில் வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளனர். இதனை மக்கள் புரிந்து கொண்டு அவர்களை முற்றிலுமாக புறக்கணிப்பார்கள்’ என்றார்.

மூலக்கதை