பாக். பெண் தீவிரவாதியை விடுவிக்கக் கோரி 4 பேரை பிணைக் கைதியாக பிடித்த நபர் சுட்டுக்கொலை

தினகரன்  தினகரன்
பாக். பெண் தீவிரவாதியை விடுவிக்கக் கோரி 4 பேரை பிணைக் கைதியாக பிடித்த நபர் சுட்டுக்கொலை

*அமெரிக்காவில் போலீஸ் அதிரடிவாஷிங்டன் : அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள யூதர்கள் வழிபாட்டு தலத்தில் நேற்று முன்தினம் பிரார்த்தனை நடந்து கொண்டு இருந்தது. அப்போது, திடீரென உள்ளே நுழைந்த மர்ம நபர், அங்கிருந்த நான்கு பேரை  துப்பாக்கி முனையில் பிணைக் கைதிகளாக பிடித்தான். தகவல் அறிந்த போலீசார், வழிபாட்டு தலத்தை சுற்றி வளைத்தனர். பிணைக்கைதிகளை பிடித்த மர்ம நபர், பாகிஸ்தானைச் சேர்ந்த நரம்பியல் பெண் விஞ்ஞானியான ஆபியா சித்திக்கை விடுவிக்க வேண்டும் என்று நிபந்தனை விதித்தான். பாகிஸ்தானை சேர்ந்த இவர், ஆப்கானிஸ்தானில் அமெரிக்க ராணுவ அதிகாரிகளை கொலை செய்ய முயன்ற குற்றத்திற்காக சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். நான்கு பேர் பிணைக் கைதிகளாக பிடிக்கப்பட்டு இருந்த நிலையில் ஆறு மணி நேரத்துக்கு பின் ஒருவர் விடுவிக்கப்பட்டார். இதனைத் தொடர்ந்து பல மணி நேர போராட்டத்திற்கு பின் மர்ம நபரைப் போலீசார் சுட்டுக் கொன்று மீதமுள்ள மூன்று பேரையும் பாதுகாப்பாக மீட்டனர்.

மூலக்கதை