டாவோஸ் மாநாடு: இன்று பிரதமர் நரேந்திர மோடி சிறப்புரை

தினமலர்  தினமலர்
டாவோஸ் மாநாடு: இன்று பிரதமர் நரேந்திர மோடி சிறப்புரை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

டாவோஸ் : 'ஆன்லைன்' வாயிலாக இன்று(ஜன.,17) துவங்கி ஐந்து நாட்கள் நடக்கும் உலக பொருளாதார மன்ற மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி, சீன அதிபர் ஷீ ஜிங்பிங் ஆகியோர் இன்று சிறப்புரை ஆற்றுகின்றனர்.

ஐரோப்பிய நாடான சுவிட்சர்லாந்தில் உள்ள டாவோஸ் நகரில் உலக பொருளாதார மாநாடு ஆண்டுதோறும் நடந்து வருகிறது. கொரோனா பரவல் காரணமாக கடந்த ஆண்டு இந்த மாநாடு நடக்கவில்லை. 2022க்கு ஒத்திவைக்கப்பட்டது. தற்போது 'ஒமைக்ரான்' வகை தொற்று பரவல் உலகையே அச்சுறுத்தி வருவதால் இந்த ஆண்டு திட்டமிட்ட தேதிகளிலும் மாநாட்டை நடத்த முடியாத நிலை ஏற்பட்டது.

எனவே அதே தேதியில் 'ஆன்லைன்' வாயிலாக மாநாட்டை நடத்த முடிவு செய்யப்பட்டது. இதன்படி இன்று துவங்கி ஐந்து நாட்களுக்கு டாவோஸ் உலக பொருளாதார மன்ற மாநாடு நடக்கிறது. இதில் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் சீன அதிபர் ஷீ ஜிங்பிங் ஆகியோர் இன்று சிறப்புரை ஆற்றுகின்றனர்.

அதன் பின், ஐ.நா., பொது செயலர் ஆன்டோனியோ குட்டரெஸ் உரையாற்றுகிறார். இஸ்ரேல் பிரதமர் நப்தலி பென்னட், ஜப்பான் பிரதமர் கிஷிடா புமியோ நாளை உரையாற்றுகின்றனர்.

டாவோஸ் : 'ஆன்லைன்' வாயிலாக இன்று(ஜன.,17) துவங்கி ஐந்து நாட்கள் நடக்கும் உலக பொருளாதார மன்ற மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி, சீன அதிபர் ஷீ ஜிங்பிங் ஆகியோர் இன்று சிறப்புரை

சமரசத்துக்கு இடமளிக்காமல்... அதிகாரத்துக்கு அடிபணியாமல்... நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்...

ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.

நன்றி. தினமலர்

இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.

You’ll usually find this icon in the upper right-hand corner of your screen. You may have more than one ad blocker installed.

You may have to select a menu option or click a button.

மூலக்கதை