இளம் இந்தியா வெற்றி * தென் ஆப்ரிக்காவை வீழ்த்தியது | ஜனவரி 16, 2022

தினமலர்  தினமலர்
இளம் இந்தியா வெற்றி * தென் ஆப்ரிக்காவை வீழ்த்தியது | ஜனவரி 16, 2022

கயானா: ‘ஜூனியர்’ உலக கோப்பை கிரிக்கெட் தொடரை வெற்றியுடன் துவக்கியது இந்தியா. முதல் போட்டியில் தென் ஆப்ரிக்காவை 45 ரன்னில் வீழ்த்தியது. 

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) சார்பில் ‘ஜூனியர்’ உலக கோப்பை (50 ஓவர், 19 வயது) தொடரின் 14வது சீசன் விண்டீசில் நடக்கிறது. மொத்தம் 16 அணிகள் மோதுகின்றன. ‘பி’ பிரிவில் இந்திய அணி தனது முதல் மோதலில் தென் ஆப்ரிக்காவை சந்தித்தது.  ‘டாஸ்’ வென்ற தென் ஆப்ரிக்கா, பீல்டிங் தேர்வு செய்தது. 

கேப்டன் அபாரம்

இந்திய அணிக்கு துவக்க வீரர்கள் ஹர்னுார் சிங் (1), ரகுவன்ஷி (5) இருவரும் விரைவில் அவுட்டாகி அதிர்ச்சி தந்தனர். ரஷீத் 31 ரன் எடுத்தார். நிஷாந்த் 27, ராஜ் பாவா 13 ரன் எடுக்க, கேப்டன் யாஷ் துல் அரைசதம் அடித்து கைகொடுத்தார். இவர் 82 ரன் எடுத்து, ரன் அவுட்டானார். பின் வரிசையில் தினேஷ் (7), ராஜ்யவர்தன் (0) ஏமாற்றிய போதும்,கவுஷல் டாம்பே 35 ரன் எடுத்து உதவினார். இந்திய அணி 46.5 ஓவரில் 232 ரன்னுக்கு ஆல் அவுட்டானது.

விக்கி ‘ஐந்து’

தென் ஆப்ரிக்க அணிக்கு இந்திய சுழல் வீரர் விக்கி, பெரும் வில்லனாக அமைந்தார். இவரது சுழலில் வாலன்டைன் (25), மாரீ (8) சிக்கினர். பிரிவிஸ் 65 ரன் எடுக்க, கேப்டன் ஜார்ஜ் ஹீர்டன் 36 ரன் எடுத்தார். மற்றவர்கள் ஏமாற்ற தென் ஆப்ரிக்க அணி 45.4 ஓவரில் 187 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. இந்திய அணி 45 ரன்னில் வெற்றி பெற்றது. விக்கி 5 விக்கெட் சாய்த்தார். ராஜ் பாவா 4, ராஜ்யவர்தன் 1 விக்கெட் வீழ்த்தினர். 

 

அயர்லாந்து அபாரம்

‘பி’ பிரிவில் நடந்த மற்றொரு மோதலில் அயர்லாந்து அணி (236/9), உகாண்டாவை (197/10) 39 ரன்னில் வென்றது. ‘சி’ பிரிவு லீக் போட்டியில் ஜிம்பாப்வே அணி (321/9), பப்புவா நியூ கினியாவை (93/10) 228 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

மூலக்கதை