பஞ்சாப் தேர்தலை தள்ளி வைக்க கோரி தலைமை தேர்தல் ஆணையருக்கு பாஜக கடிதம்

தினகரன்  தினகரன்
பஞ்சாப் தேர்தலை தள்ளி வைக்க கோரி தலைமை தேர்தல் ஆணையருக்கு பாஜக கடிதம்

சண்டிகர்: பஞ்சாப் தேர்தலை தள்ளி வைக்க கோரி தலைமை தேர்தல் ஆணையருக்கு பஞ்சாப் மாநில பாஜக கடிதம் எழுதியுள்ளது. பஞ்சாப்பில் பிப்ரவரி 14ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடத்தப்பட உள்ளது. பிப்ரவரி 16ம் தேதி குரு ரவிதாஸ் பிறந்த நாள் கொண்டாடப்பட உள்ளது. குரு பிறந்த நாளை கொண்டாட தாழ்த்தப்பட்ட மக்கள் வாரணாசிக்கு செல்வார்கள். பெரும்பாலானோர் உள்ளூரில் இருக்க மாட்டார்கள் என்பதால் தேர்தலை தள்ளி வைக்கக் வேண்டும் என கடிதத்தில் குறிப்பிட்டுள்ளது.

மூலக்கதை