ஆஸி.யுடன் கடைசி டெஸ்ட் 188 ரன்னில் சுருண்டது இங்கி.

தினகரன்  தினகரன்
ஆஸி.யுடன் கடைசி டெஸ்ட் 188 ரன்னில் சுருண்டது இங்கி.

ஹோபர்ட் : ஆஸ்திரேலிய அணியுடனான 5வது மற்றும் கடைசி டெஸ்டில், இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 188 ரன்னுக்கு சுருண்டது.பெல்லரிவ் ஓவல் மைதானத்தில் நடந்து வரும் இப்போட்டியில், டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பந்துவீசியது. முதல் நாள் ஆட்ட முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 241 ரன் எடுத்திருந்த ஆஸ்திரேலியா, நேற்று 303 ரன்னுக்கு ஆல் அவுட்டானது (75.4 ஓவர்). லாபுஷேன் 44, டிராவிஸ் ஹெட் 101, கிரீன் 74, கேரி 24, லயன் 31 ரன் விளாசினர். இங்கிலாந்து பந்துவீச்சில் பிராடு, வுட் தலா 3, ராபின்சன், வோக்ஸ் தலா 2 விக்கெட் கைப்பற்றினர்.அடுத்து முதல் இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து, ஸ்டார்க் - கம்மின்ஸ் கூட்டணியின் தாக்குதலை சமாளிக்க முடியாமல் 47.4 ஓவரில் 188 ரன்னுக்கு சுருண்டது. வோக்ஸ் 36, கேப்டன் ரூட் 34, பில்லிங்ஸ் 29, மலான் 25, கிராவ்லி 18, வுட் 16, போப் 14 ரன் எடுத்தனர். ஆஸி. பந்துவீச்சில் கம்மின்ஸ் 4, ஸ்டார்க் 3, போலண்ட், கிரீன் தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.இதைத் தொடர்ந்து, 115 ரன் முன்னிலையுடன் 2வது இன்னிங்சை தொடங்கிய ஆஸ்திரேலியா, 2ம் நாள் ஆட்ட முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 37 ரன் எடுத்துள்ளது. வார்னர் 2வது இன்னிங்சிலும் டக் அவுட்டாகி ஏமாற்றமளித்தார். கவாஜா 11, லாபுஷேன் 5 ரன்னில் வெளியேறினர். ஸ்டீவன் ஸ்மித் 17 ரன், போலண்ட் 3 ரன்னுடன் களத்தில் உள்ளனர். கை வசம் 7 விக்கெட் இருக்க, ஆஸி. அணி 152 ரன் முன்னிலையுடன் இன்று 3வது நாள் ஆட்டத்தை சந்திக்கிறது.

மூலக்கதை