‘தனிமை’யில் இந்திய வீராங்கனைகள்: உலக கோப்பை தொடருக்காக | ஜனவரி 15, 2022

தினமலர்  தினமலர்
‘தனிமை’யில் இந்திய வீராங்கனைகள்: உலக கோப்பை தொடருக்காக | ஜனவரி 15, 2022

புதுடில்லி: உலக கோப்பை கிரிக்கெட் தொடருக்காக இந்திய வீராங்கனைகள் ஒரு வாரம் தனிமைப்படுத்திக் கொள்ள உள்ளனர்.

நியூசிலாந்தில், வரும் மார்ச் 4 முதல் ஏப். 3 வரை பெண்களுக்கான ஐ.சி.சி., உலக கோப்பை (50 ஓவர்) கிரிக்கெட் தொடர் நடக்கவுள்ளது. இதில் இந்தியா, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான் உள்ளிட்ட 8 அணிகள் பங்கேற்கின்றன. கடந்த முறை பைனல் வரை சென்ற மிதாலி ராஜ் தலைமையிலான இந்திய அணி, இம்முறை தனது முதல் போட்டியில் பாகிஸ்தானை (மார்ச் 6) சந்திக்கிறது. அதன்பின் நியூசிலாந்து (மார்ச் 10), விண்டீஸ் (மார்ச் 12), இங்கிலாந்து (மார்ச் 16), ஆஸ்திரேலியா (மார்ச் 19), வங்கதேசம் (மார்ச் 22), தென் ஆப்ரிக்கா (மார்ச் 27) அணிகளை எதிர்கொள்கிறது. இதற்கு தயாராகும் விதமாக நியூசிலாந்து செல்ல உள்ள இந்திய அணி, ஐந்து ஒருநாள், ஒரே ஒரு ‘டி–20’ போட்டி கொண்ட தொடரில் விளையாடுகிறது. இத்தொடர்களுக்கான இந்திய அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது.

 

இந்நிலையில் நியூசிலாந்து, உலக கோப்பை தொடர்களுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள இந்திய வீராங்கனைகள் இன்று முதல், ஒரு வார காலத்துக்கு மும்பையில் தனிமைப்படுத்திக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இவர்கள், வரும் ஜன. 24ல் நியூசிலாந்துக்கு புறப்பட்டுச் செல்வர் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நியூசிலாந்து மண்ணில் பயிற்சியை துவக்குவதற்கு முன்பு, மீண்டும் ஒரு வாரம் தனிமைப்படுத்தப்படுவர்.

மூலக்கதை