மதுரை மாவட்டத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டி நிறைவு: 21 காளைகளை அடக்கி முதலிடம் பிடித்தார் பிரபாகரன்

தினகரன்  தினகரன்
மதுரை மாவட்டத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டி நிறைவு: 21 காளைகளை அடக்கி முதலிடம் பிடித்தார் பிரபாகரன்

மதுரை: மதுரை மாவட்டத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டி நிறைவு பெற்றது. பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியில் 729 காளைகள் அவிழ்த்துவிடப்பட்டன. 300 மாடுபிடி வீரர்கள் பங்கேற்றனர். மதுரையை சேர்ந்த பிரபாகரன் என்பவர் 21 காளைகளை அடக்கி முதலிடம் பிடித்தார். 4வது சுற்றில் களத்தில் பிரபாகரன் 8 காளைகளை அடக்கியுள்ளார். கடந்த 2020, 2021ம் ஆண்டில் பாலமேடு ஜல்லிக்கட்டில் முதலிடத்தை பிடித்து பிரபாகரன் கார் வென்றார்.

மூலக்கதை