திருச்சி சூரியூரில் ஜல்லிக்கட்டு போட்டி நிறைவு!: புதுக்கோட்டையை சேர்ந்த யோகேஷ் முதலிடம்..!!

தினகரன்  தினகரன்

திருச்சி: திருச்சி சூரியூரில் விறுவிறுப்புடன் நடைபெற்று வந்த ஜல்லிக்கட்டு போட்டி நிறைவுபெற்றது. திருச்சி சூரியூரில் 486 காளைகள் வாடிவாசலில் இருந்து அவிழ்த்து விடப்பட்டன. சூரியூர் ஜல்லிக்கட்டில் காளைகள் முட்டியதில் ஒருவர் பலியானார். 42 பேர் காயமடைந்தனர். ஜல்லிக்கட்டில் வீரத்தை வெளிப்படுத்திய வீரர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த யோகேஷ் என்பவர் முதலிடத்தை பிடித்தார். 12 மாடுகளை பிடித்த யோகேஷுக்கு பைக் பரிசாக வழங்கப்பட்டது.

மூலக்கதை