நாட்டின் முதுகெலும்பாக ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் உருவெடுக்க உள்ளன: பிரதமர் நரேந்திர மோடி பேச்சு

தினகரன்  தினகரன்
நாட்டின் முதுகெலும்பாக ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் உருவெடுக்க உள்ளன: பிரதமர் நரேந்திர மோடி பேச்சு

டெல்லி: நாட்டின் முதுகெலும்பாக ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் உருவெடுக்க உள்ளன என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்திருக்கிறார். சிறு, குறு தொழில் முனைவோர்களுடன் காணொலி வாயிலாக கலந்துரையாடிய பிரதமர் மோடி, இந்த பத்தாண்டுகள் (டிகேட் ) தொழில்நுட்ப பத்தாண்டுகள் ( டெக்கேட்) என்று அழைக்கப்படும் என்று குறிப்பிட்டார். அரசு மற்றும் நிர்வாக முறைகளில் இருந்து விடுபட்டு புதுமை தொழில்முனையும் சக்தியாக ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் திகழும் என குறிப்பிட்டார். மேலும் இந்தியா 100வது சுதந்திர தினத்தை கொண்டாடும் போது ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் வளர்ச்சியில் முக்கிய பங்காற்றும் என்று பிரதமர் மோடி கூறினார். புதிய முயற்சிகளால் உலக அரங்கில் இந்தியா பெருமிதமான நிலையை எட்டும் என்றும் பிரதமர் புகழாரம் சூட்டியிருக்கிறார்.

மூலக்கதை