பங்கு சார்ந்த பண்டுகளில் சாதனை முதலீடு

தினமலர்  தினமலர்
பங்கு சார்ந்த பண்டுகளில் சாதனை முதலீடு

மும்பை:கடந்த ஆண்டில், பங்கு சார்ந்த பண்டுகளில், சாதனை அளவாக 37.73 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு முதலீடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
தர நிர்ணய நிறுவனமான, ‘கிரிசில்’ இது குறித்து மேலும் தெரிவித்துள்ளதாவது:கடந்த ஆண்டில், மியூச்சுவல் பண்டு துறையில், பங்கு சார்ந்த பண்டுகளில் மட்டும், கிட்டத்தட்ட 37.73 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு முதலீடு செய்யப்பட்டுள்ளது.இது, இதற்கு முந்தைய ஆண்டுடன் ஒப்பிடும்போது, 22 சதவீதம் அதிகமாகும்.
கடந்த 2020ம் ஆண்டின் முற்பகுதியில், சந்தை கடுமையான சரிவைக் கண்டது. அதன் பிறகான காலத்தில், முதலீடுகள் ஏற்றம் கண்டுள்ளன.கடந்த 2020ம் ஆண்டில், பங்கு சார்ந்த பண்டுகளிலிருந்து முதலீடுகள் அதிகம் வெளியே எடுக்கப்பட்டாலும், 2021ல் அதிகமான முதலீடுகள் மேற்கொள்ளப்பட்டன.
இருப்பினும், கடன் சார்ந்த பண்டுகளில், கடந்த ஆண்டில் மட்டும் 35 ஆயிரம் கோடி ரூபாய் அளவிலான முதலீடுகள் வெளியே எடுக்கப்பட்டுள்ளன.மாதாந்திர தவணை முதலீடு திட்டமான எஸ்.ஐ.பி., திட்டத்தின் வாயிலாக, கடந்த ஆண்டில் மட்டும் 1.14 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு முதலீடு மேற்கொள்ளப்பட்டது.

மூலக்கதை