கோவா பாஜகவில் உச்சக்கட்ட மோதல் சீட் தரவில்லை என்றால் சுயேச்சையாக போட்டி

தினகரன்  தினகரன்
கோவா பாஜகவில் உச்சக்கட்ட மோதல் சீட் தரவில்லை என்றால் சுயேச்சையாக போட்டி

*மறைந்த மாஜி முதல்வரின் மகன் தடாலடிபனாஜி : கோவா பாஜகவில் உச்சக்கட்ட மோதலாக பாஜக மறைந்த முன்னாள் அமைச்சரின் மகன் சுயேச்சையாக போட்டியிட முடிவு  செய்துள்ளதால் உச்சக்கட்ட குழப்பம் ஏற்பட்டுள்ளது. கோவாவிலும் பாஜக எம்எல்ஏக்கள் கட்சியில் இருந்து விலகி வரும் நிலையில் அம்மாநில தேர்தல் சூடு சூடுபிடித்துள்ளது. பாஜக முதல்வர் பிரமோத் சவாந்திற்கு புதிய தலைவலியாக முன்னாள் பாதுகாப்பு அமைச்சரும், முன்னாள் கோவா முதல்வருமான மறைந்த மனோகர் பாரிக்கரின் மகன்  உத்பால், கோவா தலைநகர் பனாஜி சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட முடிவு செய்துள்ளார். அவருக்கு பாஜக சீட் கொடுக்காவிட்டால், சுயேச்சை வேட்பாளராக போட்டியிட வாய்ப்புள்ளதாக அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்தன. தற்போது பனாஜி தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் உள்ள முக்கிய பிரபலங்களை உத்பால் சந்தித்து வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. முன்னதாக கடந்த 2019ம் ஆண்டில் மனோகர் பாரிக்கர் மறைந்த பிறகு, சித்தார்த் ஸ்ரீபாத் குன்கலியேங்கர் என்பவர் பாஜக சார்பில் பனாஜி ெதாகுதியில் போட்டியிட்டார். ஆனால், அந்த தொகுதியில் காங்கிரசின் பாபுஷ் மான்செரெட் வெற்றி பெற்றார். இவர் கடந்த 2019ல் பாஜகவில் இணைந்தார். அதனால் அவர் மீண்டும் பனாஜியில் போட்டியிட ஆர்வம் காட்டி வருகிறார். பாபுஷிடம் இருந்து சீட்டை பறித்து உத்பாலுக்கு கொடுத்தால் கட்சிக்குள் பெரும் பிரசனையாகிவிடும் என்பதால், கோஜா பாஜக தலைமை பெரும் குழப்பத்தில் சிக்கியுள்ளது. எம்எல்ஏ பாபுஷை பொருத்தவரை அவரது மனைவி தலேகான் தொகுதி எம்எல்ஏ, அவரது மகன் பனாஜியின் மேயராக உள்ளார். அது மட்டுமின்றி, பாபுஷின் செல்வாக்கு 6 தொகுதியில் இருப்பதால் பாஜக கோவா பொறுப்பாளர் தேவேந்திர பட்னாவிசுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

மூலக்கதை